12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 22, 2025... இன்று மாற்றங்கள் காண போகும் ராசிகள்
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜூலை 22 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆடி 06ம் தேதி செவ்வாய்கிழமை
பிரதோஷம். காலை 06.45 வரை துவாதசி திதியும் பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 07.52 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், அதன் பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 6 வரை அமிர்தயோகமும், பிறகு இரவு 07.52 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்
மேஷம் - மனைவி வழியில் நன்மை உண்டாகும். வேலை செய்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முறைகளைக் கையாளுவீர்கள். சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். மாணவர்கள் விரும்பிய துறையில் சேர நன்றாகப் படிக்க வேண்டும். உடல் நலம் தேறும்.
ரிஷபம் - பயணங்களால் லாபம் கிடைக்கும். திருமணம் நடக்கும். தம்பதிகள் தங்கள் கடமையை உணர்வார்கள். உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்படுவீர்கள். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு அன்பு பெருகும். பழைய பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டுபிடிப்பீர்கள்.
மிதுனம் - கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சொத்து வாங்குவது விற்பதில் கவனம் தேவை. பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் தீரும். நண்பர்களுடன் மனஸ்தாபம் வரலாம்.
கடகம் - வங்கியில் இருந்து உதவி கிடைக்கும். மகளுக்கு கர்ப்பம் சம்பந்தமான நல்ல செய்தி கிடைக்கும். வீடு, நிலம் விற்பதற்கான முயற்சிகள் வெற்றி அடையும். வியாபாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் கை கொடுக்கும். உடல் பளபளக்கும்.
சிம்மம் - மார்க்கெட்டிங் பிரிவினர் ஆர்டர்களை முடிப்பார்கள். நண்பர்களால் நன்மை உண்டாகும். வேற்று மதத்தினர் உதவுவார்கள். வேலையில் பணிகளை விரைவாக முடிப்பீர்கள். குழந்தைகளுக்கு வங்கியில் டெபாசிட் செய்வீர்கள். பெண்களுக்கு வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி - தம்பதிகளுக்கு அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வேலையில் மரியாதை கிடைக்கும். கலைத்துறையினர் வெளிநாடு செல்வார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
துலாம் - வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கண் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கண் பரிசோதனை செய்வது நல்லது. நீண்ட நாட்களாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரும். அதில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும்.
விருச்சிகம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது. இறைவனை வழிபடுவதால் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
தனுசு - எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். பூர்வீக சொத்து பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்களுக்கு உதவி செய்வார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். தாய் வழி உறவினர்களால் மரியாதை கிடைக்கும்.
மகரம் - வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். வீடு மனை வாங்கும் போது ஆவணங்களை சரி பார்ப்பது நல்லது. வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான காலம் வந்துள்ளது. மகன், மகள் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவார்கள்.
கும்பம் - ஆடல், பாடல் கலைஞர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நல்ல நேரம். ஆன்மீக செலவுகளுக்கு இடம் உண்டு. பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து சொத்து, பணம், நகை வந்து சேரும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள்.
மீனம் - மருத்துவ செலவுகளுக்கு இடம் உண்டு. வியாபாரத்தில் திருப்புமுனை உண்டாகும். பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். மாமனார் உடல்நலத்தில் கவனம் தேவை. சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலைக்கு போவார்கள்.