12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 22, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் ராசிகள்

Su.tha Arivalagan
Sep 22, 2025,10:42 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 06 ம் தேதி திங்கட்கிழமை

நவராத்திரி ஆரம்பம். அதிகாலை 01.42 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. இன்று பகல் 12.25 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.02 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை 

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - குடும்பத்தில் மற்றவர்கள் தேவையில்லாமல் தலையிடுவார்கள். அதை தடுக்க வேண்டும். திருமண முயற்சிகள் நல்ல பலன் தரும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். நீங்களே முடிவெடுத்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் உயர்கல்வி படிக்க வெளிநாடு செல்வார்கள். அதிர்ஷ்ட நிறம் கரும் பச்சை.


ரிஷபம் -  கணவர் வழியில் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு செய்தி மகிழ்ச்சி தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்குவார்கள். குடும்ப பிரச்சினை சரியாகும். வேலை செய்பவர்களுக்கு வேலை சுமை குறையும். உடல் நலம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் கடல் நீலம்.


மிதுனம் - தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். பிள்ளைகளை நல்ல வழியில் நடத்துவீர்கள். மனைவி வழியில் இருந்து உறவினர்கள் வருவார்கள். கல்யாண பேச்சு வார்த்தை நல்லபடியாக முடியும். வியாபாரத்தை அதிகமாக்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அதிர்ஷ்ட நிறம் ரோஸ். 


கடகம் - கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தம்பதிகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒன்று சேருவார்கள். கலைஞர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நிலம் மற்றும் மனையால் லாபம் வரும். அரசாங்க விஷயங்களில் லாபம் உண்டு. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. 


சிம்மம் - வேலையில் உள்ளவர்களை அதிகாரிகள் பாராட்டுவார்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மேற்படிப்பு படிப்பார்கள். இடம், மனையால் லாபம் வரும். அரசியல்வாதிகளுக்கு புது பதவி கிடைக்கும். பங்குச் சந்தையில் லாபம் வரும். உடல் நலம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம் வான் நீலம்.


கன்னி - பழைய கடன்கள் வசூலாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை நம்புங்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள். 


துலாம் -   குடும்பத்தில் தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களால் நன்மை உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வேலையில் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அடைவீர்கள். உடலில் கை, கால், மூட்டு வலி வந்து போகும். அதிர்ஷ்ட நிறம் ஊதா.


விருச்சிகம் - வேலையில் அமைதி நிலவும். விரும்பியவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். வெளியுலகத் தொடர்புகள் அதிகரிக்கும். உடல் நலம் பலம் பெறும். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க போராட வேண்டி இருக்கும். வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வீட்டில் செல்லப் பிராணிகளிடம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம் கிரே. 


தனுசு -  கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டைகள் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். அன்பு அதிகரிக்கும். பணம் குறைவாக இருந்தாலும் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். நண்பர்களுக்கு உதவி செய்யும் நிலையில் நீங்கள் இருப்பீர்கள். அவர்களும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


மகரம் - பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். நண்பர்களில் சிலர் மட்டுமே உங்களிடம் உண்மையான அன்பு வைத்திருப்பார்கள். அவர்களில் ஒருவர் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார். உடல் நலம் நன்றாக இருக்கும். வரவேண்டிய பதவி உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்ட நிறம் நீலம். 


கும்பம் -  சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று கடவுளை வேண்டுவது நல்லது. இன்று சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளது. அதிர்ஷ்ட நிறம் பச்சை. 


மீனம் - வெளியுலகத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வங்கியில் பணம் சேமிப்பீர்கள். வேலையில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலை செய்பவர்களிடம் அனுசரித்து போங்கள். வரவுக்கு சமமாக செலவுகள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம் ரோஸ்.