12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 24, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

Su.tha Arivalagan
Jul 24, 2025,10:45 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூலை 24 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 08ம் தேதி வியாழக்கிழமை

ஆடி அமாவாசை. அதிகாலை 03.05 வரை சதுர்த்தசி திதியும் பிறகு அமாவாசை திதியும் உள்ளது. மாலை 06.11 வரை புனர்பூசம் நட்சத்திரமும், அதன் பிறகு பூசம்  நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 6 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மாணவர்களுக்கு நல்ல நாள். அவர்கள் தங்கள் இலக்கை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் சில மாற்றங்களைச் செய்வார்கள். 


ரிஷபம் - தனியாக தொழில் செய்யும் பெண்களுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். வேலையில் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். உறவினர்கள் உங்களிடம் முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். 


மிதுனம் - அக்கம் பக்கத்து வீட்டாரின் தொல்லை குறையும். வயதானவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களால் நன்மை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைச்சுமை கூடும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். 


கடகம் - வீட்டில் இருந்தபடியே வருமானம் அதிகரிக்கும். தொழில் சூடு பிடிக்கும். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். திருமண பேச்சு வார்த்தை நல்லபடியாக முடியும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். அவர்களும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள்.


சிம்மம் - பணத்தை கவனமாக கையாளுங்கள். மாமியார் மற்றும் சொந்தக்காரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வேலையில் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். தொழிலதிபர்கள் சில விஷயங்களைப் புரிந்து கொள்வார்கள்.


கன்னி - வேலை செய்பவர்களுக்கு வேலைச்சுமை குறையும். சம்பளம் உயரும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்குவார்கள். குடும்ப பிரச்சினை சரியாகும். கணவர் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பழைய நண்பர்கள் பணம் கேட்டு வந்தால் கவனமாக இருங்கள். 


துலாம் -   பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வரும். வெளிநாட்டு தொடர்பால் நன்மைகள் அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். பணம் பற்றாக்குறை வந்தாலும் தேவையான நேரத்தில் பணம் கிடைக்கும். 


விருச்சிகம் - இன்று கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். எனவே கவனமாக இருக்க வேண்டும். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெற்றோர்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் பங்கு கொள்வார்கள். பெண்கள் சுயதொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். 


தனுசு -   இன்று மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். எனவே யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். தேவையற்ற குழப்பங்கள் வந்து போகும். இறைவனை பக்தியுடன் கும்பிடுவது நல்லது. முடிந்தால் தியானம் செய்யவும்.


மகரம் - பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரன் கிடைக்கும். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.


கும்பம் -  வேலைக்கு செல்பவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். கோவிலுக்கு செல்வீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும். எந்த முடிவாக இருந்தாலும் நீங்களே எடுப்பது நல்லது. வெளிநாட்டு செய்தி மகிழ்ச்சி தரும். 


மீனம் - தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளுக்கு விரும்பிய துறை கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் திட்டம் மாறும். வேலை செய்பவர்களுக்கு அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். கணவரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். உடல் உஷ்ணமாகும். அதற்கு ஏற்ற உணவை உட்கொள்வது நல்லது.