12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 30, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Su.tha Arivalagan
Jul 30, 2025,11:01 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூலை 30 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 14ம் தேதி புதன்கிழமை

வளர்பிறை சஷ்டி. அதிகாலை 02.29 வரை பஞ்சமி திதியும் பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இரவு 11.52 வரை அஸ்தம் நட்சத்திரமும், அதன் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.55 வரை சித்தயோகமும், பிறகு இரவு 11.52 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  பெண்களுக்கு ஆடை மற்றும் ஆபரணங்கள் சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணப் பிரச்சினை நீங்கும்.


ரிஷபம் - சில சமயங்களில் முன்கோபம் வரலாம். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். வேலை செய்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். குடும்பத் தலைவிகள் வீட்டு வேலைகளை விரைவில் முடிப்பீர்கள். உடல் நலம் பலம் பெறும். 


மிதுனம் - மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. பெண்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். எதிரிகள் விலகிப் போவார்கள். வேலையில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். 


கடகம் - சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சுபகாரியங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். புதிய மொழிகளை கற்க ஆரம்பிப்பீர்கள். 


சிம்மம் - திருமணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்த துணை கிடைக்கும். குடும்பத்தினருடன் வாக்குவாதம் வந்து போகும். வேலையில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து போங்கள். காதலை வெளிப்படுத்த இது ஏற்ற காலம். 


கன்னி - அரசியல்வாதிகள் மக்களிடம் ஆதரவு பெறுவார்கள். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் காட்டுவீர்கள். உடல் நிலை மேம்படும். வரவேண்டிய பணம் வந்து சேரும். பெண்கள் குடும்ப விஷயங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. 


துலாம் -   பழைய பிரச்சனைகளுக்கு புதிய வழியில் தீர்வு காண்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வேலை செய்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். குடும்பத் தலைவிகளின் தேவைகள் நிறைவேறும். 


விருச்சிகம் - முகம் பொலிவு பெறும். பணப் பிரச்சினை இருக்காது. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய கிளைகள் திறப்பீர்கள்.


தனுசு -   இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். தவிர்க்க முடியாத பயணமாக இருந்தால், நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கவும். தொழில் அதிபர்கள் வருமானத்தை பெருக்க திட்டமிடுவார்கள். மாணவர்கள் நன்றாக படிப்பார்கள். நொறுக்குத் தீனிகளை தவிர்க்கவும். 


மகரம் - நட்பால் ஆதாயம் உண்டு. செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிடுங்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது வேகத்தை குறைப்பது நல்லது.


கும்பம் -  இன்று சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. இறைவனை பிரார்த்தனை செய்வது நல்லது. புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. 


மீனம் - மாமா, அத்தை ஆகியோரால் ஆறுதல் அடைவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.