தேவசயனி ஏகாதசி.. சனிக்கிழமை இரவு தொடங்கி.. ஞாயிறு காலை முடியும்!
- ஸ்வர்ணலட்சுமி
விசுவா வசு வருடம் 20 25 ஜூலை 5, சனிக்கிழமை இரவு 8:19 மணிக்கு ஏகாதசி திதி தொடங்கி 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 1:6 மணிக்கு முடிவடைகிறது. இன்று வரும் ஏகாதசியின் பெயர் தேவ சயனி ஏகாதசி.
ஏகாதசி விரதம் அனைத்து பாவங்களையும், கர்ம வினைகளையும் நீக்கி வாழ்வில் இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் நீக்கி, பிறப்பு -இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அளிக்கக்கூடிய அற்புதமான விரதம் ஆகும். அதனாலேயே ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களிலும் உயர்வானதாகவும் முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. தவறாமல் ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து பெருமாளை வேண்டுபவர்களுக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நாளை "ஆஷாதி ஏகாதசி" என்றும் கூறுவர். இந்த நாள் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு. இந்த ஏகாதசி விரதம் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்து நாட்காட்டியின் படி ஏகாதசி ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வருகிறது .அவற்றில் ஒன்று கிருஷ்ண பக்ஷத்திலும் மற்றொன்று சுக்ல பக்ஷத்திலும் வருகிறது, ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகளும் ஆஷாதி மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசி "ஆஷாதி ஏகாதசி" என்றும் "தேவ சயனி "ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு மனித வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு பகல் மற்றும் இரவு போன்றது ஆகும் .உத்தராயணம் அவர்களின் பகல் நேரம். இந்த ஏகாதசி அன்று விஷ்ணு தூங்கச் சென்று கார்த்திகை ஏகாதசி என்று விழிக்கிறார் என்று நம்பப்படுகிறது .விஷ்ணு பகவான் தூங்கும் இந்த நான்கு மாத காலம்" சதுர் மாசம் "என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் நாம் விரதம் இருந்து வழிபடுவதனால் அனைத்து கடவுள்களின் சக்தியும் ஒருமுகப்படும் என்பது நம்பிக்கை.
ஆஷா தி ஏகாதசி அன்று அதிகாலை எழுந்து குளித்து பூஜை அறையில் மலர்களால் அலங்கரித்து துளசி இலைகள் ,துளசி மாலைகள் சாற்றி நைவேத்தியம் வைத்து, நெய் விளக்கு ஏற்றி, தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடுவது சிறப்பு. "ஓம் நமோ பகவதே வாசுதேவாய "என்ற மந்திரத்தையும் , "ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தையும்" படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்து கேட்பது, குடும்பத்தினர் நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
மேலும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட ,தொழில், மேன்மை பெறுவதற்காகவும், வருமானம் பெருக, சேமிப்பு அதிகரிக்க, படிப்பு, வேலை போன்ற எந்த குறைகள் இருந்தாலும் பெருமாள் வழிபாடு செய்ய நல்ல தீர்வு கிடைக்கும்.
தேவ சயனி ஏகாதசியில் பெருமாள் வழிபாடு செய்து அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.