விண்வெளி நாயகா.. மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று!

Su.tha Arivalagan
Oct 15, 2025,11:31 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


மக்களின் ஜனாதிபதி என்று அன்போடு அழைக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாள் இன்ந்று.


ஆவுல் பக்கீர் ஜெயினுலாபுதீன் அப்துல் கலாம் அவர்கள்  1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்தார். ஏவுகணை நாயகன் டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்வதில்  தென் தமிழ் சார்பாக  அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். 


கலாம் அவர்கள் ஓர் இந்திய  அறிவியலாளரும் , நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய  வளனார்  கல்லூரியில் இயற்பியலும், சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். எளிமையான தொடக்கத்திலிருந்து இந்தியாவின் அறிவியல் மற்றும் அரசியல் நிலப்பரப்பில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக உயர்ந்தார்.


கலாம் அவர்கள் ஒரு அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியராக இருந்ததால் இந்த நாள் மாணவர்களின் கல்வி மற்றும் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது."'உலக மாணவர் தினம் "கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


சாதனைகள் மற்றும் பங்களிப்புகள்:




கலாம் அவர்கள் விண்வெளி விஞ்ஞானியாக இஸ்ரோ (ISRO) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்(DRDO)  பணியாற்றினார். இந்தியாவின் முதல் ஏவுகணை திட்டத்தின் இயக்குனராக இருந்தார். எனவே கலாம் அவர்கள்   இந்தியாவின் 'ஏவுகணை நாயகன்' என்று அழைக்கப்பட்டார். 2002 முதல் 2007ம் ஆண்டு வரை இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றினார். கலாம் அவர்களுடைய எளிமை, கல்வி மற்றும் தேசப்பற்றுக்காக மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். அறிவியல் கல்வி மற்றும் இளைஞர்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார் "விங்ஸ் ஆஃப் ஃபயர் "(Wings of Fire) '"அக்னிச் சிறகுகள் " எனும் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் பலரையும் ஊக்குவித்தார்.


"மாணவர்களே கனவு காணுங்கள் "என்று மாணவர்களை சிறந்த முறையில் ஊக்குவித்தார்.  குடியரசு தலைவர் மாளிகையில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர், சைவ உணவுகளை மட்டுமே உண்டவர்.


குடும்பம்:


கலாம் அவர்கள் அப்போது சென்னை மாகாணத்தில் இருந்த பாம்பன் தீவில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்த இவர் ஐந்து உடன்பிறப்புகளில் இளையவர் ஆவார். அவருடைய மூதாதையர்கள் செல்வந்தர்களாக இருந்தனர்.கலாமின் குடும்பம் அவரது இளமை பருவத்தில் வறுமையில் வாடியது.மூதாதையர் வீட்டைத் தவிர பாம்பன் பாலம் கட்டப்பட்டதன் மூலம் குடும்ப செல்வம், சொத்துக்களும் இழந்தன. கலாம் தனது குடும்பத்தை நிதி ரீதியாக ஆதரிக்க செய்தித்தாள்களை விற்றார்.


எளிமை மற்றும் உயர்ந்த சிந்தனையின் நற்பண்புகளை டாக்டர் கலாம் நம்பினார்.அவர் ஒரு உண்மையான தேசபக்தர். அமைதி மற்றும் அஹிம்சையை  ஆதரித்தவர்.வறுமையை போக்க கல்வி சாத்தியங்கள் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார் ஏனெனில் இதுவே வறுமையை போக்க ஒரே வழி என்று மிகவும் நம்பினார். ஜூலை 27 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு டாக்டர் கலாம் அவர்கள்  ஷில்லாங் கில் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஒரு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தபோது  காலமானார்.


கனவு என்பது துக்கத்தில் வருவதல்ல,உங்களை தூங்கவிடாமல் செய்வது என்பது அவருடைய புகழ் பெற்ற சிந்தனை.  இளைஞர்கள் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை" என்று கூறினார். 'இந்தியா 20 20 ', 'IGNITED MINDS' போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் "பாரத ரத்னா "உட்பட பல விருதுகளை பெற்றார். இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அவருடைய பங்களிப்புகள் மறக்க முடியாதவை. மாணவர்களுக்கு எப்பொழுதும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். இந்தியாவின் பெருமை இன்றும் அவர் மூலம் உயர்ந்துள்ளது.


டாக்டர் கலாம் அவர்கள் மறைந்தாலும் அவருடைய கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் என்றும் பலருக்கு ஊக்கமாக இருக்கின்றன.  டாக்டர் அப்துல் கலாம் போன்ற சிறந்த தலைவர்கள் நம் இந்தியாவில் உருவாக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் அவருடைய பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சிறு துளிகளை பகிர்ந்து உள்ளோம்.


மேலும் இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.