நண்டு சாப்பிடுவீங்களா?.. அப்படீன்னா கிட்ட வாங்க.. உங்களுக்குத்தான் இந்த செய்தி!
- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
நண்டு சாப்பிடுவீங்களா?
National Crab Meat Day (தேசிய நண்டு இறைச்சி தினம்)
தேசிய நண்டு இறைச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 9 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நண்டு இறைச்சியின் சுவை, ஊட்டச்சத்து மற்றும் அதன் உணவு முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் நாளாக கொண்டாடப்படுகிறது. கடல் உணவுகளை விரும்புவோர் இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுங்கள்.
நண்டு இறைச்சி மிகவும் சுவையான கடல் உணவாகும். இதில் அதிகமான புரதச்சத்து உள்ளது. நண்டு இறைச்சி உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்களை வழங்குகிறது. இது உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பல நாடுகளில் நண்டு உணவுகள் மிகவும் பிரபலமாக உள்ளன.
நண்டு மூலம் பலவகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. நண்டு குழம்பு, நண்டு பிரை போன்றவை மக்கள் விரும்பும் உணவுகளாக உள்ளன. இந்த நாளில் மக்கள் நண்டு உணவுகளை சமைத்து சுவைக்கிறார்கள்.
வயல் நண்டு மிகவும் சுவையாக இருக்கும்.தாய்ப்பால் சுரக்க வயல் நண்டு மிகவும் உதவுகிறது. உணவு பாரம்பரியத்தையும் போற்றிடுவோம்.
சமைப்பதற்கு முன்பு நண்டினை குழந்தைகளுக்கு காட்டி அதன் உடல் உறுப்புகளை அறிய செய்வோம். கடல் வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொள்வோம். கடல் உணவு கலாச்சாரத்தை அறிந்து கொள்ள இந்த நாள்உதவுகிறது. மீனவர்கள் மற்றும் கடல் உணவு தொழிலாளர்களின் உழைப்பை போற்றி கொண்டாடுவோம்.
(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)