ஆள் பாதி ஆடை பாதியா?.. இன்று என்ன நாள் தெரியுமா மக்களே!
- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ
ஆள் பாதி ஆடை பாதியா?.. இன்று தேசிய உடை தினம் (National Dress Day)
2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்- 6ம் தேதி தேசிய உடை தினம் கொண்டாடப்படுகிறது.
உடைகளின் பெருமைகளை பிரபலப்படுத்த ஆடை வடிவமைப்பாளர் ஆஷ்லே லூரன் கேர் (Ashley Lauren Kerr, fashion designer) முதன் முதலாக ஆரம்பித்து வைத்தார்.
ஆதிகால மனிதர்கள் முதலில் உடை அணியாமல் வாழ்ந்தனர். பின்னர் குளிர், வெப்பம் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பு பெற உடை பயன்படுத்தத் தொடங்கினர். மரத்தின் இலைகள் மற்றும் தழைகள் உடையாக பயன்படுத்தினார்கள். விலங்குகளின் தோல்கள் உடையாக அணிந்தார்கள். உடை மனிதனை இயற்கை சூழலிலிருந்து பாதுகாத்தது. வேட்டையாடும் போது விலங்கு தோல் உடை மிகவும் உதவியது.
ஆதிகால உடைகள் மிகவும் எளிமையானவையாக இருந்தன. காலப்போக்கில் மனிதர்கள் நெசவு கற்றுக்கொண்டு புதிய உடைகளை உருவாக்கத் தொடங்கினர். உடைகள் பலவிதம். பாரம்பரிய உடை, நவீன உடை, எளிய உடை, காவி உடை என பலவிதமாக உடைகள் காணப்படுகின்றன. நமக்கு விருப்பமான உடைகளை நாம் அணிவதற்கு உரிமை உண்டு.
சாதாரண நாட்களில் நாம் விரும்பிய ஆடைகளை அணிந்து கொண்டும்,பாரம்பரிய நிகழ்வுக்கு செல்லும் பொழுது பாரம்பரிய ஆடைகளை அணிந்து செல்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். இந்த நாள் பாரம்பரிய உடைகளின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான தேசிய உடைகள் உள்ளன. இந்தியாவின் பாரம்பரிய உடைகள் மிகவும் அழகும் சிறப்பும் கொண்டதாக காணப்படுகிறது. பெண்கள் சேலை, சல்வார் கமீஸ் போன்ற உடைகளை அணிகிறார்கள். ஆண்கள் வேஷ்டி, குர்தா போன்ற உடைகளை அணிகிறார்கள்.
தேசிய உடைகள் அந்த நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. பழங்காலத்திலிருந்து பாரம்பரிய உடைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பலவிதமான பாரம்பரிய உடைகள் உள்ளன.
தேசிய உடைகள் நமது மரபையும் பாரம்பரியத்தையும் காப்பாற்றுகின்றன என்பதை உணர்ந்து
இந்த நாளில் பல இடங்களில் பாரம்பரிய உடை அணியும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்த நாள் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்பதை உணர்ந்து பாரம்பரிய உடைகளை பாதுகாப்பது நமது கடமை என்பதை வெளிப்படுத்துவோம்.