Negative-வா Think பண்ணாம இருக்க என்ன செய்ய வேண்டும்?

Su.tha Arivalagan
Apr 10, 2026,01:21 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


Negative வா Think  பண்ணாம இருக்க என்ன செய்ய வேண்டும்? இது என்ன கேள்வி என்று உங்க மனசு கேட்கிறதா...!


இதைத் தான் நாம் நினைக்கிறோம். அப்படி பின்பற்ற முடியவில்லை என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா ? 


உங்களுக்காக தான் இன்றைய தினத்தை நாம் சிறப்பாக கொண்டாட போகிறோம். நெகட்டிவ் எண்ணங்களை நீக்கும் நாள் (National Erase Self-Negativity Day)


இந்த நாள் மனிதர்களின் உள்ளுணர்வில் வரும் நெகட்டிவ் எண்ணங்களை (Negative thoughts) குறைத்து, அவற்றை நல்ல எண்ணங்களாக மாற்ற தான் நாம் கொண்டாடுகிறோம். 


இந்த நாள் 2024 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ம் தேதி மனநல அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் இணைந்து இன்றைய தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.


தன்னையே குறை குறை சொல்லி இருக்கும் பழக்கத்தையும், பிறர் மீது குறை கூறும் பழக்கத்தையும் முற்றிலும் கைவிடுவதற்காக தான் கொண்டாடப்படுகிறது .

 

நீண்ட காலத்திற்கு தன்னம்பிக்கையுடன் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து காட்டுவோம்.


நாம் எப்பொழுதும் உயர்வாக சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்துல் கலாம் ஐயா கனவு காணுங்கள் என்று சொல்லியதை போல் நமது கனவு நேர்மறையாகவே இருக்க வேண்டும்.




அடுத்தவர்கள் நம்மை என்ன சொல்லுவார்கள்?  அடுத்தவர்கள் நம்மை எப்படி நினைப்பார்கள்? இது போன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்பதை தவிர்க்க வேண்டும்.


நாம் எப்பொழுதும் என்னால் இது செய்ய முடியாது என்று கூறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.  யார் எப்படி நினைத்தாலும் நமக்கு கவலை இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். நாம் நமது எண்ணத்திற்கு முதலில் மதிப்பு கொடுக்க வேண்டும். நமது எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும் . நாம் கோபமாக இருக்கும் பொழுதும் எந்த முடிவும்  எடுக்காமல் இருப்பது நல்லது.


உடல் சோர்வு அல்லது கோபம் வரும் பொழுது நாம் அமைதியாக இருப்பதே சிறப்பானதாக இருக்கும். நம்மைப் பற்றி  எதிர்மறையாக பேசினால் நாம் அவர்கள் பேசினால் பேசட்டும் என்று விட்டுவிட வேண்டும். எதிர்மறையாக பேசுபவர்களின் பேச்சுக்கு நாம் மதிப்பு  தர வேண்டியது இல்லை. என்னால் முடியும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டால் நம்மால் கட்டாயம் வெற்றி பெற முடியும்.


நமது இலக்கை அடையும் வரை நாம் போராடிக் கொண்டிருக்க வேண்டும்.  நெகட்டிவாக எண்ணாமல் பாசிட்டிவாக  எண்ணினால் விரைவில் வெற்றி பெற முடியும். முயற்சி திருவினையாக்கும் என்பதைப் போல் நாம் பாசிட்டிவாக எண்ணினால் கட்டாயம் சாதிக்க முடியும்.


நாம் எந்த நேரத்திலும் நெகட்டிவ் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்போம். நெகட்டிவ்வாக சிந்திக்காமல் பாசிட்டிவாக சிந்திப்போம். பாசிட்டிவாக சிந்தித்துக் கொண்டே இருப்போம் . 


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில்  தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)