சிறுநீரகங்களை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோமா?

Su.tha Arivalagan
Mar 12, 2026,02:48 PM IST

- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ வீரமணிகண்டன்


இன்று உலக சிறுநீரக தினம் (National / World Kidney Day) 


உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையில் (12.3.26) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சிறுநீரகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக கொண்டாடப்படுகிறது.


மனித உடலில் சிறுநீரகங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தும் முக்கிய உறுப்பாகும். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் சிறுநீரகங்களை பாதுகாக்க முடியும். அதிக உப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வது உடல் நலத்தையும் சிறுநீரக நலத்தையும் மேம்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.


சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். மருத்துவ பரிசோதனைகளை அவ்வப்போது செய்ய வேண்டும். புகைபிடித்தல் மற்றும் மதுபானம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை உணர்ந்து அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.




சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பலரின் உயிரைக் காப்பாற்றுகிறது. உலகம் முழுவதும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைப்புகள் மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.இவற்றையெல்லாம் பொது மக்களாகிய நாம் அவசியம் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் நோயின்றி நிம்மதியாக வாழ முடியும்.


பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உடல்நலத்தை காக்க சிறுநீரகங்களை பாதுகாப்பது அவசியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல பழக்கவழக்கங்கள் நோய்கள் வராமல் தடுக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.


ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ முயற்சி செய்யுங்கள். சிறுநீரக நோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.


(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில்  மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)