National Vaccination Day.. குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது!

Su.tha Arivalagan
Mar 16, 2026,02:10 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc, B.Ed


குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து பார்க்க இன்றைய  நாளை கொண்டாடுவோம். இன்று National Vaccination Day – தேசிய தடுப்பூசி தினம் 


போலியோவை நாட்டிலிருந்தே விரட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கொண்டாடப்படுகிறது. 


போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கைகால்களை நிரந்தரமாக செயலிழக்கச் செய்கின்றன. போலியோ நுண்கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன என்பதை உணர்ந்து நம்மைச் சுற்றி  சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். 


1995ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டுமுறை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும் வழங்கப்பட்டதன் மூலம் 2014ஆம் ஆண்டு போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது என்பதை உணர்ந்து நாம் பெருமை அடைவோம்.




தடுப்பூசி மனிதர்களை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.மேலும் அந்த நோய்கள் எதிர்காலத்தில் வராமல் இருப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தடுப்பூசி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சரியான நேரத்தில் சரியான தடுப்பூசிகளை  ஒவ்வொரு பெற்றோரும் போட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இன்றைய நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

 

போலியோ போன்ற ஆபத்தான நோய்களை தடுப்பூசி மூலம் தடுக்க முடிகிறது என்பதை இன்றைய காலகட்டத்தில் மக்களால் நன்றாக உணர்ந்து பார்க்க முடிகிறது. இதனை உணர்ந்து அரசு பல தடுப்பூசி திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.


தடுப்பூசி நோய்களை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள்  முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.அவர்களை இந்நாளில் நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றியை தெரிவிப்போம்.  குழந்தைகள் பிறந்ததிலிருந்து பல கட்டங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்துவதால் சமூக ஆரோக்கியம் மேம்படுகிறது என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.


பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி குழந்தைகளுக்கு  பாதுகாப்பாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். குழந்தைகள் பிறந்ததிலிருந்து வளரும் வரை இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம் அரசுக்கு பரிந்துரைத்த அட்டவணைப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 


தடுப்பு ஊசியால் தடுக்க முடிந்த, நோய்களையும் கிருமித் தொற்றுகளையும் மற்றும் அனைத்து வியாதிகளையும் தடுக்க வேண்டும். ஆரம்பத்தில் தடுக்க தவறினால் பிற்காலத்தில் உடல் ஊனம் முதற்கொண்டு மூளை காய்ச்சல் வரை ஏற்படும் அபாயங்கள் உள்ளன. குழந்தை பிறந்தது முதல் 14 வயது ஆகும் வரை தடுப்பூசி அட்டவணையில் உள்ளது போல காலத்திற் கேற்ப முறையான பருவத்தில், சரியான நேரம், சரியான இடத்தில், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 


ஒவ்வொரு முறையும் தடுப்பூசி போடும் பொழுது அந்தப் போடும் காலத்திற்கேற்ற உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடை உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் ஏற்ப ஒரு பக்குவமான முறையில் வளர்ப்பதற்கு தூண்டுகோலாக தடுப்பூசி பயன்படுகிறது. உலகளவில் பல நோய்கள் தடுப்பூசியால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. 


இந்தியாவில்  போலியோ நோயை முற்றிலும் ஒழித்த நாடாக மாறியுள்ளது என்பதை உணர்ந்து நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். தடுப்பூசி  மருத்துவ அறிவியலின் பெரிய சாதனையாகும் என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு  ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)