தமிழ்நாடு நாள்.. தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... நம் தமிழ்நாடு!
- ஸ்வர்ணலட்சுமி
தமிழ்நாட்டில் இன்று ஜூலை 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை "தமிழ்நாடு நாள் "சிறப்பாக கொண்டாடப்படுகிறது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு திமுக தலைவர் மு .க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் அறிஞர் அண்ணாதுரை தீர்மானம் கொண்டு வந்த ஜூலை 18-ஆம் தேதி "தமிழ்நாடு நாள் "என கொண்டாட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு வித்திட்ட நாள் தான் தமிழ்நாடு நாளாக இருக்கும் என தமிழ் அறிஞர்களின் கருத்தின் அடிப்படையில் இந்த பெயர் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது .
தமிழ்நாடு இந்தியாவின் 11 வது பெரிய மாநிலம் ஆகும் .இதன் எல்லைகள் வடக்கே ஆந்திரா ,மேற்கில் கேரளா ,வடமேற்கில் கர்நாடகா, கிழக்கே வங்காள விரிகுடா ஆகியன அமைந்துள்ளது. புதுச்சேரி ஒன்றிய பகுதி சுற்றி தமிழ்நாடு அமைந்துள்ளது. தமிழ்நாடு என்று அழைக்கப்படும் இம் மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகவும், மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகவும் திகழ்கிறது.
இதற்குப் பின்னணியில் இருக்கும் வரலாறு என்னவென்று சுருக்கமாக பார்ப்போம்...
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் அவர்கள் கைப்பற்றிய இடங்களை மாகாணங்களாக பிரித்து ஆட்சி செய்தனர். அதில் தென்பகுதியில் உள்ள தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசும் மக்கள் இருந்த பகுதி "மெட்ராஸ் மாகாணம் "என்று இருந்தது. 1947 ஆம் ஆண்டு நம் நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு ஆங்கிலேயர் விட்டு சென்ற ஆட்சி அமைப்பு சிறிது காலத்திற்கு அப்படியே பின்பற்றப்பட்டது .பின்னர் அதனைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன .தமிழ் பேசும் மக்கள் இருக்கும் பகுதிக்கு அன்று சூட்டப்பட்ட பெயர் "மெட்ராஸ் ஸ்டேட்" அதாவது மெட்ராஸ் மாநிலம் ஆகும்.
பெயர் மாற்றம்: 1967ம் ஆண்டு வரை இந்தப் பெயர்தான் இருந்து வந்தது. 1967ம் ஆண்டு திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு "மெட்ராஸ் ஸ்டேட் "என்ற பெயரை அப்போதைய முதலமைச்சராக இருந்த சி .என். அண்ணாதுரை "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் செய்தார். தியாகி சங்கரலிங்கனார் உள்ளிட்ட பல தலைவர்களின் தியாகம் இந்த பெயர் மாற்றத்திற்கு பின்னணியில் அடங்கியுள்ளது. பல வருடங்களாக போராட்டங்கள் நடைபெற்றது. பல வருட போராட்டங்களுக்குப் பிறகு, முதலமைச்சர் அண்ணாதுரை சட்டமன்றத்தில் 1967ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி இந்த தீர்மானம் கொண்டு வந்தார். அந்த நாளையே நாம் "தமிழ்நாடு நாள்" அல்லது "தமிழ்நாடு தினம் "என கொண்டாடி வருகிறோம்.
தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... என் தமிழ்நாடு: மண்ணில் செழிக்கும் பயிர்கள், காவிரி பாயும் நதிகள், கோபுரங்கள், உயர்ந்து நிற்கும் கோயில்கள், தமிழரின் வீரமும் அறிவும் நிறைந்த தமிழ்நாடு, மண்வாசனை மாறா கிராமமும், கிராமத்து மக்களின் பாசமும், பெருமை அழியாத பண்பாடு ,கலாச்சாரம், நாட்டுப்புற கலைகள், திருவிழா பண்டிகைகள், மறையாத உறவுமுறை ருசி கூட்டும் சமையல் வகைகள் ,கூட்டுக் குடும்பங்கள் என நிலைத்து நிற்கும் என் "தமிழ்நாடு"
தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் "தமிழ்நாடு நாள்" நல்வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.