Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

Su.tha Arivalagan
Apr 18, 2026,06:16 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc, B.Ed


கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் பெண்களும், கணவன் சொல்லை மீற மாட்டோம் என்று வாழும் பெண்கள் கொண்டாடும் தினத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம்.


அப்படி என்ன தினம்? என்று ஆவலாக இருக்கிறதா?


வாங்க தெரிந்து கொள்வோம்.


கணவரை பாராட்டுவதற்கான தினம்(ஏப்ரல் 18) கணவரை திட்டிக் கொண்டிருந்தவர்களும் இன்றைய நாளில் கணவரை பாராட்டி விடுவோம். ஒவ்வொரு கணவரும் தனது குடும்பத்திற்காக உழைப்பதை நினைத்து பாராட்டி விடுவோம்.


தனக்கென எந்த பொருளையும் வாங்காமல் தனது குழந்தைகளுக்காக செலவிடும் கணவரை பாராட்டி விடுவோம். கணவர் நம்மைக் திட்டிக் கொண்டே இருந்தாலும் எதையும் தாங்கும் இதயமாக செயல்படுவதற்கு காரணமாக இருக்கும் கணவரை பாராட்டி விடுவோம். 




குடும்பத் தலைவன் என்ற பொறுப்பில் இருந்துக் கொண்டு நம்மை குடும்பத் தலைவனாக குடும்ப அட்டையில் பதிவு செய்து மகளிர்  உரிமைத் தொகை பெற காரணமாக இருந்த கணவரை பாராட்டி விடுவோம்.


உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொன்னால் ,அதற்கு பதிலடி கொடுப்பதற்காக நாம் துணிச்சலாக செய்யும் செயலுக்கு காரணமாக இருந்த கணவரை பாராட்டி விடுவோம் .


தன்னை நேசிக்காவிட்டாலும், தனது குழந்தைகளுக்காக பாடுபடும் கணவரை பாராட்டி விடுவோம். வேலை தான் முக்கியம் என்று எந்த நிகழ்விற்கும் வராத கணவரை கடமையே கண்கண்ட தெய்வம் என்று பாராட்டி விடுவோம் .


கட்டாய வற்புறுத்தலின் பெயரில்  சில நிகழ்வில் கலந்து கொள்ளும் கணவரை பாராட்டி விடுவோம் . தனக்கென்ன எந்த விருப்பமும் இல்லாமல் வாழும் கணவரை பாராட்டி விடுவோம். சண்டை போட்டாலும் விட்டுக் கொடுத்து வாழும் கணவரை பாராட்டி விடுவோம்.


சிறு சிறு ஆசைகளை  நிறைவேற்றா விட்டாலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் கணவரை பாராட்டி விடுவோம்.


எளிமையாக வாழும் கணவரை பாராட்டி விடுவோம். சில நேரங்களில் விட்டுக் கொடுத்து வாழும் கணவரை பாராட்டி விடுவோம். இப்படி பல்வேறு நிலைகளில் நாம் கணவரை பாராட்டி விடுவோம் . இப்படி பாராட்டிய மனைவிக்கு ஒவ்வொரு கணவரும் செய்ய வேண்டியது என்ன என்று தெரிந்து கொள்வோமா?


தனது உடல் நலனில் அக்கறை செலுத்தி தனது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட வேண்டும். இதை மட்டும் செய்தால் அனைவருக்கும் வாழ்க்கை வசந்தமாக அமையும்.


இன்றைய நாளில் இருந்து அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். 

ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)