உலக தொலைக்காட்சி நாள் (World Television Day).. அன்று பார்த்த தூர்தர்ஷனும், ரூபவாகினியும்!
- ஸ்வர்ணலட்சுமி
உலகெங்கிலும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் தேதி "உலக தொலைக்காட்சி நாள்" கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அனைத்து உலக தொலைக்காட்சி கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் 1996 ஆம் ஆண்டு நவம்பர் 21-ஆம் நாள் உலக தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இந்த கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் முக்கியத்துவத்தை பற்றி கலந்துரையாடப்பட்டது. அதனை தொடர்ந்து உலக நாடுகள் பொருளாதார, பாதுகாப்பு,அமைதி, சமூக சமுதாய மாற்றங்கள்,கலை, கலாச்சார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்த நாள் சிறப்பான நாளாக கருதப்பட்டதன் பெயரில் முதல் தொலைக்காட்சி நாள் 1997 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
ஜான் லோகி பேர் ட் என்பவர் தொலைக்காட்சியை 1924 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இந்தியாவில் செப்டம்பர் 15ஆம் தேதி,1959 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி,அறிவியல் மற்றும் பண்பாடு அமைப்பு தொலைக்காட்சியினை அறிமுகப்படுத்துவதற்கு இந்தியாவிற்கு உதவியது. இருப்பினும் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்ட து. முதல் 30 ஆண்டுகளாக தூர்தர்ஷன் மட்டுமே இந்தியாவில் தேசிய அளவிலான ஒளிபரப்பு நிறுவனமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது. இன்று எத்தனையோ தொலைக்காட்சி நிறுவனங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றது.
இன்றைய காலத்தில் தொலைக்காட்சி இல்லாத வீடே இல்லை என்றே கூறலாம். புது வீடு கட்டி வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்கும் நிலையில் தொலைக்காட்சி பெட்டி முதலில் இடம்பெறுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தகவல் அறியும் தாகமும், பொழுதுபோக்கும், சிந்தனையும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை,உலகில் வாழக்கூடிய ஏழை பணக்காரன் என்கிற எந்தவித பாகுபாடும் இன்றி எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி என்பது முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்புகளில் நம் வீடுகளில் அன்றாட அவசிய தேவையாக கருதப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை பார்க்காத பெரியவர்களும், இல்லத்தரசிகளும் குழந்தைகளும் இல்லை என்று கூறலாம். உலகில் ஒரு கோடியில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகின் மறு கோடியில் இருப்பவர் தெரிந்துகொள்ளும் ஒரு அற்புதமான சாதனம் தொலைக்காட்சி.
முன்பெல்லாம் ஆடம்பர பொருள் என்று கூறப்பட்ட தொலைக்காட்சி இன்று அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டது. உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து தகவல்களையும் நம் கைகளில் இருக்கும் அலைபேசி மூலமாக தெரிந்து கொள்வோம். அதேபோல் தொலைக்காட்சியின் ரிமோட் அதன் பட்டன்களை அழுத்தினால் போதும் உலக நிகழ்வுகள் அனைத்தும் நம் கண் முன்னே நிகழ்வது போல் தொலைக்காட்சியில் நாம் பார்த்து அறிய ஒரு அற்புதமான சாதனமாக உள்ளது. பொழுதுபோக்கு, கல்வி அறிவு,சமையல் குறிப்புகள், விளையாட்டு நிகழ்வுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், அழகு குறிப்புகள்,மருத்துவம், ஆரோக்கியம், உடற்பயிற்சி, வரலாற்றுப் படங்கள், திரைப்படம், பன்மொழி நிகழ்வுகள், திருவிழாக்கள், அன்றாட செய்திகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், தொழில்நுட்பம், ஆன்மீகம், தகவல் தொடர்பு போன்ற பல்வேறு நிகழ்வுகளை நம் கண் முன்னே காண்பித்து மக்களை மகிழ்வுறச் செய்யும் ஒரே சாதனம் தொலைக்காட்சியே.
பண்டிகை நாட்களில் பட்டிமன்றத்தை ரசிக்காத பெரியவர்களும் இல்லை, விளம்பரம்,திரைப்பட பாடல்கள்,கார்ட்டூன் நிகழ்ச்சிகளை ரசிக்காத குழந்தைகளும் இல்லை, நெடுந்தொடர்களை ரசிக்காத இல்லத்தரசிகளும் இல்லை என்றே கூறலாம்.
உலக தொலைக்காட்சி தினமான இன்று தொலைக்காட்சியை பற்றி சிறு தகவல்களை பகிர்ந்து உள்ளோம். மேலும் சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.