சங்கடஹர சதுர்த்தி விரதம்.. இந்த மந்திரத்தைத் தவறாமல் சொல்லி விநாயகரை வணங்குங்கள்

Swarnalakshmi
May 30, 2025,01:23 PM IST

விசுவாவசு வருடம் 2025 மே 30ஆம் தேதி வைகாசி 16ஆம் நாள் வெள்ளிக்கிழமையான இன்று சங்கடஹர சதுர்த்தி.


சங்கடஹர சதுர்த்தி அன்று செய்யும் எளிமையான வழிபாட்டு முறையும் என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.  சங்கடஹர சதுர்த்தி மந்திரம் என்பது விநாயகரை வழிபடும்போது சொல்லப்படும் சக்தி வாய்ந்த மந்திரம் "ஓம் ஸ்ரீம் ஹரிம் க்லீம்   க் லெ ளம்   கம்    கணபதயே    வரவரத ஸர்வஜனமே    வசமாயை ஸ்வாஹா!" 


இம்மந்திரத்தை 21,   51 அல்லது 108 முறை சொல்லி வேண்டினால் வீட்டில் சுபிட்சமும், அமைதியும், செல்வ செழிப்பும் உண்டாகும் என்பது நம்பிக்கை.


இம்மந்திரத்தின் விளக்கம் யாதெனில்:




"ஓம் ஸ்ரீ ம் ஹரீம்  க்  லீ ம்  .." என்பது விநாயகரின் ஆதி சக்தியை குறிக்கின்றது.

"கம் கணபதயே" என்பது கணபதிக்கு இம்மந்திரத்தை சமர்ப்பிப்பதாக குறிக்கிறது.

"வர வரத சர்வஜனமே" என்பது எல்லா நல்ல வரங்களையும் தந்து அனைவரையும் ஆசீர்வதிப்பவன்.

"வசமாயை ஸ்வாஹா" என்பது விநாயகரின் கருணை ,சகாயம் மற்றும் வெற்றிக்கு வேண்டுகோள் விடுக்கப்படுவது என்பதை குறிக்கின்றது.


சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்:


விநாயகரின் கருணையால் தடைகள், நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் சங்கடகர சதுர்த்தி தினத்தன்று அருகம் புல் வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி இன்பம் பெருகும்.


அருகம்புல் மாலை, மோதகம் வைத்து விநாயகர் ஆலயங்களில் வழிபாடு செய்வதினால் சங்கடங்கள் எல்லாம் கரைந்து ஓடும்.


வீட்டிலும் நல்லெண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்றி அருகம்புல் மாலை விநாயகர் படத்திற்கு அல்லது உருவச் சிலைக்கும் சாற்றி நைவேத்தியம் வைத்து தீப தூப ஆராதனைகள் செய்து  ஸ்ரீ கணேச காயத்ரி மந்திரம் சொல்ல சங்கடங்கள் தீரும். ஸ்ரீ கணேச காயத்ரி மந்திரம்: "ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி பிரச்சோதயாத் "எனும் இந்த கணேச காயத்ரி மந்திரத்தை ஒன்பது முறை கூற நல்ல பலன் கிடைக்கும் .மேலும் விநாயகர் அகவலை பாடி தொந்தி கணபதியை தியானத்தால் வழிபட கூடுதல் பலன் கிடைக்கும்.


மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க ,தாம் விரும்பிய கல்லூரியில் சேர்வதற்கு அவர்களால் விரதம் இருக்க இயலவில்லை என்றாலும் வீட்டில் உள்ள பெரியவர்கள்  விரதம் இருந்து விநாயகர் வழிபாடு செய்ய சங்கடஹர சதுர்த்தி நாளில் சங்கடங்கள் அனைத்தும் போக்கி முழுமுதற் கடவுள் ஆன விநாயகர் நல்வழி காட்டுவார்.


அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று அபிஷேகப் பொருட்கள், அருகம்புல் மாலை, செம்பருத்தி பூ மற்றும் வாசனை மலர்கள் வாங்கிச் சென்று விநாயகர் வழிபாடு செய்ய அவரவர் வேண்டுதல்களை விநாயகர் நிறைவேற்றி அருள் புரிவார்.


அனைவருக்கும் சங்கடங்கள் ,துன்பங்கள், இடையூறுகள் போக்கி நல்வாழ்வு அருளும் விநாயகரை சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிபட்டு நல்வாழ்வு வாழ்வோமாக.


மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.