நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!
- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி
விடியும் நன்னாளை எண்ணி, விழிப்போடு,
விரைந்து செயல்படுதல் நம் கடமை.!
பூமி தாய்க்கு புத்துயிர் அழித்து ,
புதியதோர் உலகம் படைத்தல் நம்கடமை.!
நாளைய உலகிற்கு நல்லதை விதைப்போம்.!
நன்மைகள் விளைய, நாளும் உழைத்திடுவோம்.!
இயற்கை வளம் என்றும் காத்திடுவோம். !
இனிய நீர் நிலைகளை பாதுகாத்திடுவோம். !
காற்று மாசுபடாமல், காப்போம்,!
கங்கை, காவிரி நீரை தூய்மையாக்குவோம் !
மரங்கள் நட்டு மண் வளம் காத்திடுவோம்.!
மக்கா நெகிழியை ஒழித்து புவிதனை காப்போம்.!
அறிவியல் வளர்ச்சிக்கு வித்திடுவோம்.!
அகிலத்தில் அமைதியை நிலவிடச் செய்வோம் .!
இன்றைய கல்விமுறை மேம்படுத்திடுவோம்.!
இளைஞர் கரங்களை வலுவாக்கிடுவோம்.!
எல்லோரும் சமம் என எண்ணிடுவோம்.!
ஏழ்மையைப் போக்க, வழி கண்டிடுவோம்.!
அன்பெனும் அஸ்திவாரம், அழியாமல் காத்து,
அமைதி பாதையினை அகிலத்தில் நிறுவிடுவோம்.!
நாளை நம் சந்ததி, நம்மைப் போற்றிட ,
நல்லதோர் உலகம், கொடுப்பது நம் கடமை.!
இன்றைய நம் கடமையினை, இனிதே செய்தால்;
நாளைய உலகம் , நலமோடு வாழுமே.!
எழுத்தாளர் இரா. கலைச்செல்வியைத் தொடர்பு கொள்ள: rksindira@gmail.com
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)