தொடர்வண்டி பயணமும் தொடர்ந்து வரும் நினைவுகளும்!

Su.tha Arivalagan
Oct 09, 2025,04:28 PM IST

- மலர்விழி ராஜா


அழகான ரயில் நிலையம்.....

அவசரத்தில் 

மனித மனம்.....

தொடர்ந்து வரும் 

ரயிலோசை......

தடதடத்து 

மின்னலென...



தடம் பார்த்து 

நின்றவுடன்......

அவசரமாய் 

மக்களெல்லாம்

படபடக்க....

ஏறினரே.....

கிடைக்குமா?

இடம் என்று 

கண்களால் வலை வீசி!!

கிடைத்த 

இடம் பற்றி களைப்புடன்

அமர்ந்தாலும்"

அருகிலே

அமர்ந்தவரோ !!

கடுப்பாகி

சிடுசிடுப்பார்.......

இன்னும் சில பேரோ

ஏன் இந்த வம்பென்று

அருகினிலே இடம்

கொடுப்பார்......

"ஜன்னல் "

ஓரத்திலே.....

கிடைத்துவிட்ட

இடமென்றால் ....

கேட்கவும் 

வேண்டுமோ....??

தனக்கெனவே....

தொடர்வண்டி தொலைதூரம் 

செல்வது.....

போல் கற்பனைகள்

ஓடி வரும்....... ஏரிகளும் .....

மலைகளுமே.....

எதிர் திசையில் 

சென்றாலும்...... 

அள்ளி வரும் 

ஆனந்தம்.......

அருகினில் அமர்ந்தவரோ...... அன்புடனே 

பேசிவிட்டால்......

அத்தனையும் பேரின்பம்.....

டீ டீ..... காபி ...சாயா...சாயா..

வெள்ளரியும்..... 

கொய்யாவும்..... 

கூடவே 

கொஞ்சம் 

மல்லிகை 

மணம் ......வியாபார அவசரமோ......!!!!

வயல்வெளியில் 

பூக்களெல்லாம்

வகை வகையாய்...

சிரிக்கிறதே.....!!

அடுத்து வரும் வயலினிலே.......

கரும்பும்....! சோளமுமே....!

கண்கொள்ளா காட்சி தானே.....

கண்ணுக்கெட்டிய 

தூரம் வரை ..

பச்சை போர்வை

போர்த்தியது போல்......

பசுமையான நெல் வயல்கள்......!!

மாடு மேய்க்கும் 

பெரியவர்கள்.......!!

ஓடைநீரினிலே.....

ஆர்ப்பரிக்கும் சிறியவர்கள்......!!!!

அத்தனையும் நிமிடத்திலே.....

"மின்னலென " மறைந்தாலும்....... 

"காட்சிகள்

 மட்டும் கண்ணுக்குள்ளே

"கனவெனவே" நிற்கிறதே.......!