பேசாம ஹனிமூனையும் கூட நீங்களே முடிவு செஞ்சு சொல்லிடுங்களேன்.. திரிஷா நச் பதிலடி!
சென்னை: தென்னிந்தியாவின் முன்னணி நடிகை த்ரிஷா, தனது திருமணம் குறித்த வதந்திகளுக்கு நகைச்சுவையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.
திரிஷா குறித்த வதந்திகளுக்கு குறிப்பாக திருமணம் குறித்த வதந்திகளுக்குப் பஞ்சமே கிடையாது. அவ்வப்போது ஏதாவது வதந்தி வந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த அளவுக்கு நாட்டில் வேலை வெட்டி இல்லாத, வேஸ்ட் பீப்பிள் அதிகமாகி விட்டார்கள்.
இந்த நிலையில் சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருடன் அவர் திருமணம் செய்யவிருப்பதாக ஒரு பேச்சு இப்போது கிளம்பியுள்ளது. இதை தனது ஸ்டைலில் லெப்ட் ஹேன்ட்டில் டீல் செய்துள்ளார் திரிஷா.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மற்றவர்கள் என் வாழ்க்கையை எனக்காக திட்டமிடுவதை நான் விரும்புகிறேன். தேனிலவுக்கான தேதியையும் அவர்களே முடிவு செய்வார்கள் என்று காத்திருக்கிறேன்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவரது இந்த நக்கல் கலந்த பதிலைப் பாராட்டி வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாமலேயே, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது பாணி பலரையும் கவர்ந்துள்ளது.
த்ரிஷா, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக நடித்து வருகிறார். திருமணத்திற்கும் திரிஷாவுக்கும் சம்பந்தம் இல்லாமல் இல்லை. இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். ஆனால், தொழில் ரீதியான கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த நிச்சயதார்த்தம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் த்ரிஷா, தனது நடிப்புத் தொழிலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவில் பல பெரிய படங்களிலும், வெற்றிப் படங்களிலும் நடித்து வருகிறார்.