Madurai TVK Maanadu: தவெக மாநாட்டில் விஜய் செய்ய இருக்கும் தரமான சம்பவம்!
மதுரை : மதுரையில் தவெக.,வின் 2வது மாநில மாநாடு இன்று மாலை பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்காக காலையிலேயே லட்சக்கணக்கில் கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் மாநாடு நடக்கும் பரமபத்தி பகுதியில் குவிய துவங்கி விட்டனர்.
தவெக மாநாடு நடக்கும் நாளில் மதுரையில் மழை பெய்யும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக மதுரையில் இன்று காலையிலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெயிலையும் கண்டு கொள்ளாமல் ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள் என பலரும் மாநாட்டு திடலில் குவிய துவங்கி விட்டனர். அவர்களுக்கு தேவையான தண்ணீர் வசதி, கழிவறை வசதி ஆகியவையும் மாநாட்டு திடலில் செய்யப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட ஏற்பாடுகள் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாதுகாப்பு, மருத்துவ ஏற்பாடுகள் என சகலமும் தயாராக உள்ளது. மாநாட்டை மாலை 4 மணிக்கு துவக்கலாம் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக சற்று தாமதமாக துவக்க தவெக.,வினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தவெக மாநாட்டிற்கு இன்று எத்தனை லட்சம் பேர் வரப் போகிறார்கள்? விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டை விட அதிகமான கூட்டம் இந்த மாநாட்டிற்கு வருமா? அதை விட முக்கியமாக விஜய் இன்றைய மாநாட்டில் என்ன பேச போகிறார்? இவற்றை தான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி ஒரு தரமான சம்பவத்தை விஜய் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி இன்றைய மாநாட்டில் என்னவெல்லாம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.
தவெக மாநாட்டில் விஜய் செய்ய உள்ளவை:
1. தமிழக அரசியலில் மிகப் பெரிய பேசு பொருளாக மாறி உள்ள தவெக மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்ஜிஆர் புகைப்படங்கள் குறித்து விஜய் விளக்கம் அளிக்கலாம்.
2. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தவெக.,வின் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடலாம்.
3. சமீப காலமாக தமிழகத்தில் நடந்து வரும் லாக்கப் மரணங்கள், கொலைகள், அமலாக்கத்துறை ரெய்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த பேச வாய்ப்புள்ளது.
4. தூய்மை பணியாளர்களின் போராட்டம், சென்னையில் தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்த விவகாரம் குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளது.
5. ஆட்சியில் பங்கு தருவதாக கடந்த மாநாட்டிலேயே விஜய் அறிவித்து இருந்தும் இதுவரை தவெக கூட்டணியில் யாரும் இணையவில்லை. அதனால் பல கட்சிகளின் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக சில முக்கிய அறிவிப்புக்களை விஜய் வெளியிட வாய்ப்புள்ளது.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, எட்டு முக்கிய நபர்களை விஜய் இன்று மேடை ஏற்ற போகிறாராம். யார் இந்த எட்டு பேர்? இவர்களை எதற்காக விஜய் மாநாட்டு மேடையில் ஏற்ற போகிறார்? என்பவை அனைத்தும் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.