திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!
சேலம்: என்னை போல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க தில், திராணி இருக்கிறதா? என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் பரப்புரைக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், விஜய் வீட்டை விட்டு வெளியே வா... பனையூரை விட்டு வெளியே வா... என்று சொல்பவர்களுக்கு என் வீடு எங்கே இருக்கிறது எனத் தெரியுமா? என்னை சீண்டி பாக்குறதா நினைச்சி கேலியும், கிண்டலும் பண்றவங்களுக்கு சொல்றேன். என் தாய்நாடான தமிழகம் தான் என்னுடைய வீடு. என் வீட்டில் மொத்தம் 8 கோடி பேர் இருக்காங்க. இந்த தமிழ்நாட்டு மக்கள் தான் என் குடும்பம். மக்கள் கூட நிக்கப்போவது விஜய் மட்டும் தான். என்னை நேசித்த மக்களுக்காக மட்டுமே நான் அரசியலுக்கு வந்தேன். அது தவறா? மற்ற கட்சிகள் மாநாடு நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அனுமதி கொடுக்கப்படுகிறது. நான் மக்களையும் சந்திக்கவும், மக்கள் என்னை சந்திக்கவும் இடம் தர மாட்டார்கள். தரவும் விடமாட்டார்கள்.
காசு கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு, அவர்கள் காதிலேயே விசில் ஊதி அனுப்புங்கள். gen zயை பணம் கொடுத்து ஏமாற்ற முடியாது. எங்கள் ஓட்டு எங்கள் உரிமை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. வீதிக்கு வீதி மட்டுமில்லாமல் வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம் தான். ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே முதல்வர் அறிவித்த இந்த கோடைகால சிறப்பு தொகை ரூ.2000. திமுக தனக்குப் போட்டியாக கருதுவதும், தன்னை வெல்லப்போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் நம்மைத்தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் உறுதியாகிறது.
உங்களிடம் ஓட்டு அல்ல நீதி கேட்டு வந்திருக்கிறேன். என்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தப்பா?. தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்யத்தான் அரசியலுக்கு வந்தேன். பணத்தை கொள்ளையடிப்பதை தவிர அவர்களுக்கு வேறெதும் அனுபவம் உள்ளதா? என்னை போல் சொந்தமாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க தில், திராணி இருக்கிறதா? . ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியமில்லாததை வாக்குறுதிகளாகக் கொடுக்க மாட்டேன். ஆட்சிக்கு வந்தபின்னும் அவர்கள் கொடுக்கவில்லை என்று சொல்லாமல் உங்களுக்காக போராடத் தயாராக இருக்கிறேன்.
தமிழகம் எப்போதும் அவுட் ஆப் கன்ரோல் என்று கூறும் அரசுக்கு சட்டம் ஒழுங்கில், பெண்கள் பாதுகாப்பில், இளைஞர்கள் வேலைவாய்ப்பில், மொத்தத்தில் உங்கள் ஆட்சியே அவுட் ஆப் கன்ரோல் தான். கட்சி ஆரம்பித்தவர்களையே மறந்தவர்கள், அனுபவம் குறித்து பேசுகிறார்கள். கொள்ளையடிப்பதில் எங்களுக்கு அனுபவம் கிடைாது என்பது உண்மை தான். ஆட்சி முடியும் தருணத்தில் வந்து உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். மக்கள் கனவு உங்களை அகற்றி தவெகவை ஆட்சியில் வைப்பது தான்.
நான் போட்ட ஆட்சியில் அதிகாரம் என்ற குண்டு இப்போது கூட்டணிக்குள் வெடித்து வருகிறது. தாறுமாறாக வெடிக்கிறது அந்த அரசியல் குண்டு. ஸ்டாலின் சார் பதறுகிறார். ஒத்துவராது என கூறுகிறார். அவர்களை பொறுத்தவரை ஜெயிப்பதற்கு மட்டும் தான் கூட்டணி. வெல்வோம் ஒன்றாக. உங்களோடு நான் இருக்கிறேன் நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.