தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்
Nov 05, 2025,05:16 PM IST
சென்னை: 2026ல் இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி. ஒன்று திமுக, இன்னொன்று தவெக. 2026 தேர்தலில் தவெக வாகை சூடும் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் விஜய் தலைமையில் இன்று சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் தவெக தலைவர் விஜய் பேசுகையில், குடும்ப உறவுகளை இழந்ததால், வேதனையில் இருந்தோம். அதனால் தான் அமைதியாய் இருந்தோம். கரூர் துயர சம்பவத்தால் நாம் அமைதியாக இருந்த நேரத்தில் வன்ம அரசியல் பரப்பட்டது.
நியாயமான விசாரணை நடைபெறுமா என்று உச்சநீதிமன்றத்திற்கே சந்தேகம் வந்தது. எந்த ஆவணத்தின் அடிப்படையில் எஸ்ஐஆர் அமைக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேட்டது. உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திமுக வழக்கறிஞர்கள் வாதாட முடியாமல் மவுனம் காத்தனர்.
தவெகவிற்கு வந்துள்ள இடையூறு வெறும் தற்காலிகம் தான். தடம் மாற மாட்டோம். 2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி. 2026 தேர்தல் தோல்விக்கு பின், மக்களள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்ற அறிக்கையை இப்போதே திமுக தயார் செய்து கொள்ள வேண்டும்.2026ல் தவெக வாகை சூடும் வரலாறு படைக்கும்.
அவசர அவசரமாக ஒரு தனி நபர் ஆணையம் அமைத்தது அரசு. அந்த ஆணையத்தை அவமானப்படுத்தும் வகையில், அரசு அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். தனி நபர் ஆணையத்தின் தலையில் கொட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஏன் என மக்கள் கேள்வி கேட்டனர். இதெல்லாம் ஏன் நடக்கிறது, எதற்காக நடந்தது என மக்கள் கேள்வி கேட்டதை முதல்வர் மறந்து விட்டாரா?.