எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

Meenakshi
Nov 15, 2025,01:30 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தையும் அழைக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கும், மாநில தேர்தல் ஆணையருக்கும் அக்கட்சி தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.


இது குறித்து தவெக தலைவர் எழுதிய கடிதத்தில்,




பொருள்: தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தை அழைப்பதற்கான வேண்டுகோள். 


தமிழக வெற்றி கழகம்  சார்பாக  இந்த கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சி தெளிவான மற்றும் உணர்த்தக்கூடிய வரையறைக்குட்பட்ட  மற்றும் செயல்பாடுகளை நிறுவியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில் ஜனநாயக செயல்முறையை மேம்படுத்துவதற்கு எங்கள் கட்சி உறுதியாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்ற பார்வையின்றி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுதல் அரசியலமைப்பின் அடிப்படை அங்கமாகும். 


இந்தியத் தேர்தல் முறையில் முக்கிய பங்குதாரர்களாக இருப்பதாக உங்கள் அலுவலகத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 


மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகம் தேர்தல் தயாரிப்பு செயல்முறைகளைக் குறித்துக் கூட்டங்களை நடத்தியபோது, அவற்றில் TVK சேர்க்கப்படாதது, தேர்தல் செயல்முறைகளின் கண்காணிப்பில் ஒரு முக்கியமான வாக்காளர் பகுதியை பங்கேற்பிலிருந்து விலக்குகின்ற விளைவுகளை உருவாக்குகிறது என்பதை மேலும்தெரிவித்துக்கொள்கிறேன்.


வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செயல்முறைகளின் உயர்ந்த தரத்தைக் காக்கும் நோக்கத்தில், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து கூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் TVK-க்கு தக்க அறிவிப்பு வழங்கி, அவற்றில் பங்கேற்க அழைக்க வேண்டுமென மிகுந்த தாழ்மையுடன் கோட்டுக்கொள்கின்றேன். அடுத்து வரும் தேர்தல் தயாரிப்புகளுக்கான செயல்பாடுகளில், சுதந்திரமான, நியாயமான மற்றும் பிரதிநிதித்துவமான தேர்தல் செயல்முறையை உறுதி செய்யும் ஆணையத்தின் முயற்சிகளில், எங்கள் கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்க எங்கள் கட்சி தயாராக உள்ளது.


எனவே, இந்த தேர்தல் முறையை மேம்படுத்தும் பொது நோக்கில் எவருக்கும் பாதகமில்லாத இந்த நியாயமான கோரிக்கையை  பரிசீலிக்கும்படி, இந்திய அரசியல் சட்டத்தின் 324ஆம் கட்டளையின் கீழுள்ள உங்களது மேற்பார்வை அதிகாரத்தின் படி, தமிழக மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிற்கும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறு, அல்லது எங்களது மனுவை அவர்களிடம் கொண்டு செல்லுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோன் என்று தெரிவித்துள்ளார்.