புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
சென்னை: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்த நிலையில், அவரது பொதுக்கூட்டமு் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் நாளை ரோடு ஷோ நடத்தவும், பொதுக்கூட்டத்தில் பேசவும் அனுமதி கேட்டு, புதுச்சேரி டிஜஜி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையில் ரோடு ஷோ நடத்தவும், சோனாம் பாளையம் தண்ணீர் தொட்டி அருகே பொதுக்கூட்டத்தில் பேசவும் 3 நாட்கள் முன்பு புதுச்சேரி டிஜஜி அலுவலகத்தில் தவெகவினர் மனு அளித்திருந்தனர். அத்துடன் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து அனுமதி அளிக்குமாறு கடிதமும் கொடுத்திருந்தனர்.
விஜய்யின் பிரச்சாரத்தின் போது, கரூர் மாவட்டத்தில் நடத்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதை காரணம் காட்டி, விஜய் புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என டிஐஐி சத்தியசுந்தரம் தெரிவித்திருந்தார். வேண்டுமானால் பொதுக்கூட்டம் நடத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடத்த தவெக தரப்பில் 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது. நாளை விஜய் பொதுக்கூட்டத்தில் மட்டும் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தனது முழுப்பயணத்தையும் விஜய் இன்று ரத்து செய்துள்ளார். விஜய்யின் இந்த திடீர் முடிவால் தவெக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.