Exit Poll: தவெகவுக்கு 98 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் - ஆக்ஸிஸ் மை இந்தியா (இந்தியா டுடே)
சென்னை: எக்ஸிட் போல்களில் முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சாதகமான முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியா டுடேவுக்காக, ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தவெக 98 இடங்கள் முதல் 120 இடங்கள் வரை பெற்று முதலிடத்தைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளிலையே இதுதான் தவெகவுக்கு முதலிடம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 92 முதல் 110 இடங்கள் வரை பெறும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் 22 முதல் 32 இடங்கள் வரை பெறும் என்றும் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளில் இரண்டு கருத்துக் கணிப்புகளில் தவெகவுக்கு குறைந்தபட்சம் ஒறறை இலக்கத்தில் சீட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்துமே இரட்டை இலக்கத்தையே கணித்துள்ளன. அதிலும் பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக் கணிப்பில் தவெகவுக்கு குறைந்தது 30 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆக்ஸிஸ் மை இந்தியா ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு தவெக உருவெடுக்கும் என்று கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.