திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!

Su.tha Arivalagan
Apr 02, 2026,05:14 PM IST

சென்னை/திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதேபோல சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் மனு தாக்கல் செய்தார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கட்சித் தொடங்கிய பிறகு அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால், திருச்சியில் அவரது வருகையையொட்டி ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.




ஏற்கனவே பெரம்பூர் தொகுதியிலும் விஜய் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தான் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். முன்னதாக அவர் மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திவிட்டு வந்து மனுவைத் தாக்கல் செய்தார்.




தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் இன்று தங்களது தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.