அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைக்க வேண்டும்.. அதுதான் அவருக்கு நல்லது.. ராஜேந்திர பாலாஜி
சென்னை: தவெக தலைவர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். அதுதான் அவருக்கும், அவரது கட்சிக்கும் நல்லது எ்று முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
விஜய் தனியாக தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அவர் கூறினார். விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் போல கூட்டம் கூடினால் மட்டும் வாக்குகள் கிடைக்காது என்றும், கூட்டணி இல்லாவிட்டால் திமுகவக்கு அது சாதகமாக முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திர பாலாஜி கூறுகையில், விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், அவரால் தேர்தலில் பாஸ் மார்க் கூட வாங்க முடியாது. விஜய் இரண்டு பெரிய திராவிட கட்சிகளிடம் இருந்தும் விலகியே இருக்கிறார். விஜயகாந்த், ரஜினிகாந்த் ஆகியோரின் கூட்டங்களை போல, அதிக கூட்டம் சேர்வதால் மட்டும் வாக்குகள் கிடைக்காது. விஜய்யின் அரசியல் முயற்சி நல்லதே. ஆனால் அது அதிமுகவுடன் இணையும் போதுதான் பலன் தரும். இல்லாவிட்டால் திமுகவுக்கே லாபம் என்றார் அவர்.