கலையின் கவிதைச் சிதறல்கள்.. கதை பேசும் மானுடம்!

Su.tha Arivalagan
Oct 04, 2025,04:08 PM IST

- தமிழ்மாமணி இரா.  கலைச்செல்வி


தன்கதை மறந்து ,பிறர்கதை பேசும் மானுடம்..!!

தன்னை பெற்ற தாயின் அருமை தெரியா மானுடம்..!!


அன்பு ,கருணை , இரக்கம், மறந்த மானுடம் ..!!

அடுத்தவர் உழைப்பை சுரண்டும்  மானுடம்..!!


சமூக ஊடகங்களில் மூழ்கி கிடக்கும் மானுடம் ..!!

சமூக உறவுகளை புறம் தள்ளும் மானுடம்...!!


கலை இலக்கியங்கள் படிக்க மறந்த மானுடம் ..!!

கற்பனை உலகில் சஞ்சரிக்கும்  மானுடம் ..!!


பணமே குறிக்கோளாய்  கொண்ட மானுடம் ..!!

பாசத்திற்கு விலை கேட்கும் மானுடம்..!!




மானுடத்தில் பண்புகளை போற்றாத மானுடம்..!!

மனித நேயங்களை மறந்த மானுடம்..!!


மானுடத்தின் மாண்பினை மனதில் மதித்து,

மனித நேயம் என்றும் காப்போம்..!!


எண்ணங்கள் ஆயிரம்


நீ பிறந்த போது உன் எண்ணம் தெளிந்த நீரோடை..!!

நீ வளர்ந்த பிறகு உன் எண்ணம் உன்னைப்பற்றியே ..!!


உன் பள்ளிப்பருவத்தில்   உன் எண்ணமெல்லாம்..!!

உன் நண்பர்கள் பற்றி ,உன் உடன் பிறப்புகள்  பற்றி..!!


வளரும்  காலத்தில் உன் எண்ணமெல்லாம்..!!

வாழ்வின்  வெற்றியையும் ,வேலையையும்  நோக்கி..!! 


நல்ல  வேலை கிடைத்தபின்  உன் நினைவெல்லாம்..!!

நல்மனவாழ்வு ,  இன்ப  எதிர்காலம் பற்றி..!!


உன் குடும்பம் வந்த  பிறகு பெற்றோரும் உனக்கு பாரம் ..!!

உன் உடன் பிறந்தோர் ,நண்பர்களும்   உனக்கு  யார் யாரோ..!!


நடுவயதில் உன் எண்ணம் பாகப்பிரிவினை பற்றி .

முது வயதில் உன் எண்ணம் உன் உடலை பற்றி ..!!


நோய்வாய்ப்பட்ட காலத்தில்  இதுவா வாழ்க்கை..? என

நொந்து ,தினம் தினம் அழைப்பாயும்  இதயக் கடலில்.


எண்ண  அலைகள் எண்ணில் அடங்கா ..!

எண்ணங்கள் என்றும் சாகாவரம் ..!!


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)