நான் அப்படி பேசவே இல்லை: கைது பற்றி உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை குறித்து அவர் ஊடகங்களுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார்.
உதயநிதி மீது எடுக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "என் மீதான கைது நடவடிக்கையை நான் மிகவும் காமெடியாகவே பார்க்கிறேன்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்-காபி-பேஸ்ட் செய்து பொய் பிரச்சாரம்!
தன் மீதான புகாருக்கு விளக்கமளித்த அவர், "நான் பேசாத ஒன்றை பேசியதாக 'Cut Copy Paste' செய்து, திட்டமிட்டு பொய் செய்தியைப் பரப்பியுள்ளனர். நான் உண்மையில் பேசியது விவசாயப் பிரச்சனைகள் பற்றியது மட்டுமே. விவசாயிகள் அரசால் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்றும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் தான் மேடையில் பேசினேன். ஆனால், வீடியோவை எடிட் செய்து தவறான பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்."
சட்டரீதியாக சந்திப்பேன் :
பொய் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இத்தகைய பொய் வழக்குகளுக்கும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் நான் ஒருபோதும் பயப்படமாட்டேன். என் மீது சோடனை செய்யப்பட்ட இந்த வழக்கை சட்டரீதியாகவே எதிர்கொண்டு சந்திப்பேன் என்று உறுதியாகக் கூறினார்.
நடிகை த்ரிஷா தொடர்பான சர்ச்சையில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.