விழியில் விழி மோதி!
Jan 17, 2026,12:53 PM IST
கவிஞர் க.முருகேஸ்வரி
பெண்கள் பொதுவாக திரைப்படத்தில் வரும் கதாநாயகனைத் தான் அதிகம் ரசிப்பார்கள்.
சில நேரங்களில் சில கதாநாயகிகள்... ஸ்ரீதேவி..... நதியா.... குஷ்பு... ரேவதி....அர்ச்சனா.... இன்னும் சிலர் தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி பெண்களைக் கவர்ந்த கதாநாயகிகளாக வலம் வந்தனர். அப்படி ஒரு கதாநாயகி தான் ஷாலினி...
காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் மினி என்னும் கதாபாத்திரத்தில் வந்து ... முதல் படத்திலேயே தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் தான் (முன்னாள் பேபி) ஷாலினி.....
எப்போதும் விரித்த கூந்தலும், சல்வாரும் அணிந்து......அவரின் மென்மையான பார்வையாலும்........ தனித்துவமான குரலாலும் நம் மனதைக் கொள்ளை கொண்டவர்.
காதலர்களின் தேசிய கீதமாக ஒலித்த அந்தப் பாடல்...... என்னைத் தாலாட்ட வருவாளோ..... இப்போது கேட்டாலும்... பார்த்தாலும்.....நம்மைத் தாலாட்டி விட்டுத்தான் செல்கிறது.......
அந்தப் பாடல் முழுவதும்........மினி.. வெட்கம் கலந்த காதலுடன் பயந்த விழிகளில் பார்ப்பது......நடப்பது மட்டுமே வெவ்வேறு கோணங்களில் படம் பிடிக்கப்பட்டிருக்கும்...
பெண்கள் தலை வாரி பூச்சூடினால் தான் அழகு என்ற விதியை மாற்றிய என் தலைவி தான் ஷாலினி!!!!!!!
மினியாக மாறி ஜடை பின்னாமல் என் அம்மாவிடம் அடி வாங்கியது இப்போது நினைத்தாலும் இன்னும் இனிக்கிறது (வலிக்கிறது)
பூவே பூச்சூடவா வில் நதியாவை அறிமுகம் செய்த இயக்குனர் பாசில் தான் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் மினி என்னும் கதாபாத்திரத்தில் ஷாலினியையும் நமக்கு அறிமுகம் செய்து வைத்தார்!!!!!!!
விழியில் விழி மோதி பாடலோடு படத்தில் மினி தோன்றும் அந்தக் காட்சி love and love only!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).