வேற்றுமையில் ஒற்றுமையே .. நம் தேசத்தின் சிறப்பு!
- க. யாஸ்மின் சிராஜூதீன்
இந்தியா இந்தியா
சுதந்திர இந்தியா...
பலர் இன்னுயிர் ஈந்து
சுதந்திரம் பெற்றது...
நம் சுதந்திர தேசம்தான்
நம் மகிழ்வான வீடுதான்...
1950ஆம் ஆண்டிலே
ஜனவரி 26ஆம் நாளிலே....
நமக்கு நாமே சட்டம் இயற்றியே
நடைமுறைக்கு வந்ததே...
குடியரசு ஆகுமே...!
இறையாண்மை மிக்க குடியரசாக
நம் நாடு ஆனதே...
நமக்கு உரிமையை அளித்ததே
சுதந்திரமாக செயல்படவைத்ததே
நமக்கு கடமைகள் வழங்கியே
தேசத்தை மதிக்க செய்ததே..
சுதந்திர போராட்ட தியாகிகளின்
வீரத்தையும்,தியாகத்தையும்
நினைவுகூர்ந்திடுவோம்..
இந்நன்நாளிலே....
அகிம்சை வழியில் நடந்திடுவோம்
வெற்றிகள் பல கண்டிடுவோம்...
மூவண்ணக்கொடி பறக்குது
பட்டொளி வீசிப்பறக்குது
சுதந்திர காற்றை சுவாசித்து
தலைநிமிர்ந்து பறக்குது...
தியாகம்,உண்மை,நேர்மை
பசுமை,ஒற்றுமை......
எடுத்துக்காட்டி பறக்குது...
வீரவணக்கம் செலுத்துவோம்
ஒற்றுமையை நிலைநாட்டுவோம்
வேற்றுமையில் ஒற்றுமையே
நம் தேசத்தின் சிறப்புதான்
நாம் அனைவரும் பாரதத்தாயின்
பிள்ளைகளே!
நாட்டின் பெருமையை காத்திடுவோம்..!!!
வாழ்க பாரதம்...!!!
ஜெய்ஹிந்த்
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)