அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

Su.tha Arivalagan
Nov 04, 2026,01:42 PM IST

வாஷிங்டன்:அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் குடியரசுத் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஜனநாயகக் கட்சி பதிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளான 'செனட் சபை' (Senate) மற்றும் 'பிரதிநிதிகள் சபை' (House of Representatives) ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றுப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது.   


செனட் சபையில் வரலாறு காணாத வெற்றி :


செனட் சபைக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சி 52 இடங்களைக் கைப்பற்றி அதன் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது. ஆளும் குடியரசுத் கட்சி 40 இடங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இத்தேர்தலில் குடியரசுத் கட்சியின் பாரம்பரிய கோட்டைகளாகக் கருதப்பட்ட டெக்சாஸ் (Texas), தென் கரோலினா (South Carolina), மற்றும் கன்சாஸ் (Kansas) உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.   


பிரதிநிதிகள் சபையையும் கைப்பற்றியது :




செனட் சபையைத் தொடர்ந்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் ஜனநாயகக் கட்சி தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயக கட்சி 220 இடங்களை கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது (25 இடங்களை கூடுதலாகக் கைப்பற்றியுள்ளது). அதே வேளையில், அதிபர் டிரம்பின் குடியரசுத் கட்சி (GOP) 25 இடங்களை இழந்து, 129 இடங்களுடன் பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது.   


டிரம்பின் நிர்வாகத்திற்கு மக்கள் அளித்த தீர்ப்பு : 


அமெரிக்க அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தற்போதைய நிர்வாகத்திற்கும் அவரது கொள்கைகளுக்கும் அமெரிக்க மக்கள் அளித்த வெளிப்படையான தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால், இனி வரவிருக்கும் காலங்களில் அதிபர் டிரம்பின் நிர்வாகச் செயல்பாடுகள், சட்ட திருத்தங்கள் மற்றும் கொள்கை முடிவுகளை நிறைவேற்றுவதில் பெரும் சவால்கள் ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.