சரியா தூக்கம் வர மாட்டேங்குதா.. பூண்டு யூஸ் பண்ணிப் பாருங்களேன்.. மாற்றம் தெரியும்

Su.tha Arivalagan
Dec 02, 2025,01:57 PM IST

- அகிலா


பலருக்கும் இப்போது உள்ள ஒரு பெரிய பிரச்சினையே தூக்கமின்மைக் குறைபாடுதான். சரியாவே தூக்கம் வர மாட்டேங்குது. என்ன பண்றதுன்னு தெரியலை என்று பலரும் புலம்புவதைக் கேட்டு வருகிறோம். இதற்கு ஒரு எளிய உபாயம் உங்களுக்காக சொல்றேன், செஞ்சு பாருங்க. 


பூண்டு ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருள். பூண்டை சரியான முறையில் நீங்கள் பயன்படுத்தி வந்தால், தூக்கமின்மை பிரச்சினைக்கு ஓரளவுக்கு நல்ல பலன் கிடைக்கும். மூன்று நாட்களில் ஆழ்ந்த தூக்கத்தை அனுபவிக்க, பூண்டை சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்பதை காணலாம்.


பூண்டை பயன்படுத்தும் மூன்று எளிய முறைகள்




1. பூண்டு பால் (Garlic Milk)


தேவையானவை: 1 பல் பூண்டு (நறுக்கியது), 1 கப் பால், தேன் (விருப்பப்படி).


செய்முறை: நறுக்கிய பூண்டை பாலைச் சேர்த்து, மெதுவாக 5–10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், தேன் சேர்த்து, படுக்கைக்கு 30 நிமிடங்களுக்கு முன் சூடாக பருகவும்.


2. பூண்டு தேநீர் (Garlic Tea)


தேவையானவை: 1 பல் பூண்டு (நறுக்கியது), 1 கப் நீர், தேன் அல்லது எலுமிச்சை சாறு (விருப்பப்படி).


செய்முறை: நறுக்கிய பூண்டை கொதிக்கும் நீரில் 5–10 நிமிடங்கள் ஊறவைத்து, தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து, படுக்கைக்கு முன் பருகவும்.


3. பூண்டை நேரடியாக உட்கொள்வது


இந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் கொழுப்புச்சத்தை கட்டுப்படுத்தி, உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.


சிறப்பு குறிப்புகள்:


தினமும் படுக்கைக்கு முன் பூண்டை பயன்படுத்துங்கள். உங்கள் தூக்கத்தின் தரம் மூன்று நாளில்வே மேம்படும். மூக்கு அடைப்பு மற்றும் சளி பிரச்சனைகள் குறையும்.


(இதுபோன்ற பயன்பாட்டுக்கு முன்பு உங்களது மருத்துவரிடம் சரியான ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம். கட்டுரையாளர் அகிலா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)