ஒரே அரிசி, பலவகை கஞ்சி.. காய்ச்சல் இருந்தால் இதை சாப்பிட்டுப் பாருங்க!
- பா.சுமதி மோகன்
காய்ச்சல் போன்ற பலவகை உபாதைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய கஞ்சி செய்து சாப்பிடுவது வழக்கம். கஞ்சி தயாரிக்கும் போது ஒரு பங்கு அரிசிக்கு பத்து மடங்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இப்படிச் செய்வதால் அரிசி நன்கு குழைந்திருக்கும். இதை மேலும் மசித்துவிட்டுக் குடிப்பதால் தாகம், உடல் பலவீனம், சோர்வு நீங்கி செரிமானமும் எளிதில் நடக்கும்.
வயிற்றுப்புண், வயிற்றுப் போக்கு ஏற்படும் சமயங்களில் இந்தக் கஞ்சியைக் குடித்து வந்தால் உடலுக்கு நல்லது.நன்கு வேகவைத்து வடித்த சாதத்தின் கஞ்சியை முதல் நாள் இரவு சாதத்தில் விட்டுக் கலந்து மறுநாள் நீராகாரமாகக் குடித்து வருவதும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டிய ' இர்ரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் ' என்ற பிரச்சினை உள்ளவர்கள் இது போன்று அரிசி அல்லது நொய் அரிசிக்கஞ்சி மற்றும் நீராகாரம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளின் புண்ணை ஆற்றுவதோடு உடல் நலத்தையும் பாதுகாக்கும்.
தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இந்த அரிசிக்கஞ்சி, பழைய சாதம், மற்றும் நீராகாரம் ஆகியவற்றை நாம் மறந்து வரும் வேளையில் வெளிநாட்டில் வாழும் மக்கள் பாக்கெட்டில் பேக் செய்து விற்கும் இந்த உணவினை அதிக விலை கொடுத்து வாங்கி உட்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழர் வாழ்வின் முக்கிய உணவான இந்த அரிசிக்கஞ்சி நீராகாரம் போன்றவற்றை இனியாவது நாமும் உண்டு ' நம் பிள்ளைகளுக்கும் இந்த உணவினை உட்கொள்ளப் பழக்குவோமா?
(பா.சுமதி மோகன், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)