கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!

Su.tha Arivalagan
Sep 12, 2026,04:49 PM IST

- பாரதிராஜன்

தமிழகத்தில்  வேதம் தெரிந்தவர்கள் அதிகமாக வசித்தனர். தொண்டை மண்டலத்தில் நாலுவேதம் அதிகம் வசித்த ஊர்கள் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 

உ.வே.குப்புசாமி அய்யங்கார் என் தாத்தா. இவர் பண்ருட்டி அருகிலுள்ள இணைதிருமங்கலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். பெரிய வேதவித்து. 

இவர் ஒரு விவசாயியும் ஆவார். பெரிய குடும்பம். அதிர்ந்து பேசாதவர். எட்டு பெண்கள், ஒரே ஒரு மகன். மகன் சிறு வயதிலேயே காலமாகி விட்டார்.

புரோகிதம், வேதம் போகும் இடங்களில் கொடுக்கும் பணத்தை வாங்கி கொள்வார். முக்கூர் அழகியசிங்கரால் ஆசீர்வாதம் பெற்றவர். தன்நிலத்தை விற்று பெண்களின் திருமணத்தை நடத்தினார். பெயரன், பெயர்த்தி, கொள்ளுப்பேரன் &பேத்தி பார்த்தவர். பேரன்களுக்கு வேதம் சொல்லிக்கொடுத்தார். 




இவரிடம்  தானே தயாரித்து தரமாக நூற்ற பூணூல், திருமாங்கல்ய சரடு எபபோதும் கிடைக்கும். பணமே வாங்காமல் பலாபலன்கள் பார்த்து திருமண தேதி குறித்து தருவார். 

பலநேரங்களில் நடந்தே  ஊருக்கு திரும்ப வருவார். கோபமே படமாட்டார். கொடுத்த உணவை  வீணாக்காமல் சாப்பிடுவார். கடைசி வரை மூக்கு கண்ணாடி அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் 95வது வயதில் காலமானார்.

(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)