உழைப்பே உரமாகும் (கவிதை)

Su.tha Arivalagan
May 19, 2025,12:33 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


உலகம் சுழல உழைப்பே உரமாகும்..!!

உயிர்கள் வாழ உழைப்பே  வரமாகும்..!!

உழைத்து வாழ உடலே  அச்சாணியாகும்..!!

உரம்வாய்ந்த உடலே உழைப்பிற்கு ஆதாரமாகும்.!!


சோம்பலை புறந்தள்ளி உழைப்பினை உரமாக்கு ..!!

வாழும் வாழ்வில் வசந்தத்தை  வரமாக்கு.!!

உழைப்பையே என்றும் உயர்வுக்கு உரமாக்கு.!!

உலகத்தை சுழல வைத்து  வாழ்வை வளமாக்கு.!!




உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி ,

உலகை காக்கும் உன்னத மனிதன் அவன்..!!

உமுது விதைக்கும் உழவன் அவன் ..!!

உணவை அளிக்கும் தெய்வம் அவன்..!!


மண்ணை நம்பி விதையினை தூவுகிறான்..!!

பொன்னை போல் விளைச்சலை ஈனுகிறான்..!!

பயிர்கள் செழிக்க வியர்வை சிந்திக்கிறான்...!!

பலனை  அவனின்றி எவனோ அனுபவிக்கிறான்..!!


 கைவினை செய்யும் கலைஞன் அவன் ..!!

கலையின் அழகில் இறைவன் அவன்..!!

கடமை தவறா பெருந்சித்தன் அவன் .…..!!

உலகம் நிலைக்க உதவும் உத்தமன் அவன்..!!


பகலவன்  எழுமுன்னே பாய்மரப் படகுகட்டி ,

வாழ வழிதேடி வலை வீசப் புறப்படுவான்..!!

உறவுகள் கரை இருக்க, உணர்வுகள் துணை நிற்க ,

கண்களில் கனவுகளோடு கட்டுமரம் ஏறிடுவான்..!!

உலகம் சுழல இவர்களில் உழைப்பே உரமாகும்..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).