பழைய கதைகள் நல்லதா? கெட்டதா?
Sep 10, 2026,04:22 PM IST
- வே. ஜெயந்தி
பழைய கதைகள் என்றாலே
அவை வெறும் கதைகள் அல்ல
நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும்
நல்ல அனுபவங்களின் தொகுப்பு.
அவற்றில் வரும் நல்ல கருத்துகள்
நம் மனதில் மகிழ்ச்சியையும்,
நல்ல சிந்தனைகளையும் வளர்க்கின்றன.
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே
நற்சிந்தனைகளையும், நல்ல பண்புகளையும்
வளர்க்கும் கதைகளைச் சொல்ல வேண்டும்.
நாம் கேட்ட பழைய கதைகளில்
நல்லதை மட்டும் நினைவில் வைத்து,
அதிலிருந்து நல்ல பாடங்களை எடுத்துக்கொண்டால்,
அந்த நினைவுகள் என்றும்
நன்மைக்கே வழிகாட்டும்.
அவற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்
என்பதில்தான் அதன் பயன் இருக்கிறது.
நல்ல கதைகள் நல்ல சிந்தனைகள் நல்ல வாழ்க்கை!
(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)