எது மக்களாட்சி?

Su.tha Arivalagan
Sep 08, 2026,10:45 AM IST

- வே. ஜெயந்தி


இன்று பலருக்கும் தெரியாத

ஒரு உண்மை இருக்கிறது…


“மக்களாட்சி” என்றால்

மக்கள் ஆளும் ஆட்சி என்று சொல்கிறோம்.


ஆனால்—

சிலருக்கு அது பலம்,

சிலருக்கு அது பயம்,

சிலருக்கு அது

அதிகாரத்தின் மயக்கம்.


“நான்தான் இந்த நாட்டை ஆளப்போகிறேன்”

என்று குடிமகன் நினைக்கும் மயக்கமா மக்களாட்சி?


அல்லது…




“நானும் ஓர் மக்கள் தான்;

எனக்கும் சுதந்திரம் வேண்டும்.

என் குரலுக்கும் மதிப்பு வேண்டும்.

என் உரிமைக்கும் பாதுகாப்பு வேண்டும்.”


என்று கேட்கும்

ஒரு சாதாரண மனிதனின் குரலா மக்களாட்சி?


தத்துவஞானி புன்னகைத்தார்…


“மக்களாட்சி என்பது

மக்களை ஆள்வது அல்ல;

மக்களின் குரலைக் கேட்பது.”


அதிகாரம் கிடைத்தவனுக்கு

அது பெருமை அல்ல—

பொறுப்பு.


பதவி கிடைத்தவனுக்கு

அது உரிமை அல்ல—

கடமை.


மக்களாட்சி உண்மையாகும் நாள்,

ஒருவன் மற்றொருவனை ஆளும் நாள் அல்ல…


ஒவ்வொரு மனிதனும்

தன் உரிமையோடு,

தன் சுதந்திரத்தோடு,

தன் குரலோடு

நிமிர்ந்து நிற்கும் நாள்!


அதுதான்

உண்மையான மக்களாட்சி.


(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)