Tamil Poem by V Jayanthi: பணமா? மனமா?
Apr 20, 2026,01:58 PM IST
- வே.ஜெயந்தி
பணம் பேசி உலகம் ஓடும்,
பாசம் பேசும் இதயம் ஏது?
பொருள் சேர்க்கும் பொழுது போக,
புன்னகை சேர்க்கும் மனம் எங்கே?
வீடு உயர்ந்து விண்ணை தொட,
உறவு விழுந்து மண்ணில் கிடக்குது.
பணம் பின்னே பாய்ந்த வாழ்க்கை,
பாசம் பின்னே போனதே ஏன்?
நட்பு நழுவ, நெஞ்சம் நொந்தது,
நாளும் தனிமை நிழலாய் நின்றது.
கையில் காசு குவிந்தாலும்,
இதயத்தில் யாரும் இல்லையெனில்
அது வெற்றியா? வெறுமையா?
மனம் மலர்ந்தால் மகிழ்ச்சி வரும்,
நல்ல மனதில் கடவுள் வாழ்வார்
நாம் நன்மையை நெஞ்சில் விதைப்போம்.
பணம் சேர்த்தால் பேர் கிடைக்கும்,
மனம் சேர்த்தால் உலகம் கிடைக்கும்
(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)