மனதின் சக்தி

Su.tha Arivalagan
Mar 05, 2026,03:24 PM IST
- வே.ஜெயந்தி

மனித வாழ்க்கையின் மிகப் பெரிய சக்தி மனமே. மனிதன் எதை நினைக்கிறானோ, எதை சிந்திக்கிறானோ அதுவே அவன் வாழ்க்கையின் திசையை நிர்ணயிக்கிறது

மனதில் தோன்றும் சிந்தனைகள் தான் மனிதனை உயர்த்தவும் தாழ்த்தவும் செய்கின்றன. ஒரு இளைஞன் வாழ்க்கையில் பல குழப்பங்களுடன் இருந்தான். “எப்படி நல்ல வாழ்க்கையை உருவாக்கலாம்?” என்ற கேள்வி அவன் மனதில் எப்போதும் எழுந்துக்கொண்டே இருந்தது. ஒரு நாள் ஒரு முதியவர் அவனிடம் கூறினார்: “மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால், செயல்களும் நல்லதாக இருக்கும்; செயல்கள் நல்லதாக இருந்தால் வாழ்க்கையும் நல்ல பாதையில் செல்லும்.”




அந்த வார்த்தைகள் இளைஞனின் மனதில் ஆழமாக பதிந்தது. அவன் புரிந்துகொண்டான்  வாழ்க்கையின் அமைதியும் முன்னேற்றமும் வெளியில் இல்லை; அது மனதின் சிந்தனைகளில்தான் இருக்கிறது.

அன்று முதல் அவன் மனதை நல்ல எண்ணங்களால் நிரப்பத் தொடங்கினான். காலம் செல்லச் செல்ல அவன் வாழ்க்கை மாற்றம் கண்டது.

மனதை வழிநடத்த கற்றுக்கொண்டவன் வாழ்க்கையையும் வழிநடத்த கற்றுக்கொள்வான்.

(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)