இவ்வளவு தான் உலகம்…!

Su.tha Arivalagan
Apr 03, 2026,03:49 PM IST

- வே.ஜெயந்தி


உலகத்தை படைத்தவர் இறைவன்,  

அவர் என்ன எழுதி வைத்து படைத்துள்ளார்  

என்பதை அறியாமல்  

சிந்தனை செய்து வாழ்கிறோம்.


“இது தான் வாழ்க்கை,  

இது தான் உலகம்”  

என்று உணர்ந்தால்  

இவ்வுலகில் துன்பம் இல்லை.


மனதில் நிம்மதி மலரும்,  

மனிதரில் அன்பு பெருகும்,  

பொய்கள் அனைத்தும் விலகி  

உண்மை மட்டும் நிலைக்கும்.


ஏற்றத் தாழ்வற்ற உலகை உருவாக்க  

உண்மையை உரைப்போம்,  

அன்பை விதைப்போம்,  

அமைதியை வளர்ப்போம்.




பகை மறையும்,  

பாசம் மலரும்,  

பிரிவு கரையும்,  

ஒற்றுமை வளரும்.


கண்களில் கருணை பிறக்கும்,  

கைகளில் உதவி நீளும்,  

இதயங்கள் இணைந்தால்  

இவ்வுலகம் சொர்க்கமாகும்.


அப்போது தான் உலகம்  

உண்மையில் அழகாகும்…  

மனிதன் மனிதனாக வாழும்.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)