அன்பின் மொழி
Oct 05, 2026,10:37 AM IST
- கவிஞர் வ. கமலா
கண்களில் ஒளிரும் கருணையினில்
கனிவுடன் பேசும் இன்சொல்லே
மண்ணிலும் வாழும் மாண்புயிர்கள்
மதித்திடும் ஏழ்மை நிலைதனையே
விண்ணையும் அருகே உயிர்த்தெழவே
விழைந்திடும் மொழியின் வடிவினிலே
திண்மையும் பெருகி திளைத்திடலால்
திறமதை நல்கும் இலகுவாக
உரியவை வழங்க உழைத்திடுமே
உலகமும் வியக்க வைத்திடுமே
புரிதலை எளிமை படுத்தலினால்
புகுத்திடும் உறவை மொழியினிலே
அறிதலால் உணர்ந்தே பகிர்ந்திடுக
விரிந்திடும் கடலை விஞ்சிடுமே
வியந்திடும் அன்பின் வெளிப்பாடே
(கவிஞர் வ.கமலா, B.sc, M.A., M.com, M.Ed., M.phil. ஓய்வு பெற்றஆசிரியர். மூன்று நூல்கள் எழுதியுள்ளேன். ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறேன்)