மலையினில் ஆட்சியும் மாண்பின் செறிவாய்.. தமிழரின் மாண்புறு வீரம்!
- வ கமலா
தமிழர்களின் மாண்புறு வீரம், விவேகம் குறித்து ஆசிரியர் வ. கமலா இன்னிசை வெண்பா வடிவில் எழுதியுள்ள அழகிய கவிதை.. உங்களுக்காக!
முகிலும் தவழ்தல் முதன்மை அரணாய்
அகிலும் மணக்கவும் அந்தியின் சந்தம்
மகிழ்வின் சுரங்கம் மகத்துவம் காணின்
விகிர்தனும் வாழ்த்திடல் வீறு
மலையினில் ஆட்சியும் மாண்பின் செறிவாய்
தலைவனாய் காத்தும் தளரா மனத்தில்
கலையின் நயத்தினில் கற்சிலை போல
விலையும் இலாமை வியப்பு
மறத்தின் வலிமையை மாசற தந்தும்
குறளின் வழியே குறிப்பில் உணர்த்தி
திறத்தினில் மேன்மையும் திண்மை இசைவில்
அறமதைப் பேணல் அழகு
வளத்தின் அடையாளம் வானைத் தொடலின்
களமாய் வளர்தலும் காட்டின் உயிர்கள்
குளமதன் நீராய்க் குறைவிலா செல்வம்
தளமாய் அமைதலும் தரம்
(கவிஞர் வ.கமலா, B.sc, M.A., M.com, M.Ed., M.phil. ஓய்வு பெற்றஆசிரியர். மூன்று நூல்கள் எழுதியுள்ளேன். ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறேன்)