கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!
Sep 05, 2026,10:35 AM IST
- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
வ. உ. சி என்ற
மாமனிதரின்
தியாகத்தை
நமக்கு அப்படியே
காட்டும் காலக் கண்ணாடி
அவர் எழுதிய உயில்!
வரவும் செலவும்
சமமாகி வாழ்வில்
கடனே மிகவாகி
பிள்ளைகளுக்கு
எழுதிய உயில்
தியாகத்தின் உச்சம்!
சிறைப்பட்டார்!
செக்கிழுத்தார்!
அது செக்கல்ல!
பாரத மாதாவின்
தேர் என்றவர்
வ.உ.சி.
கொடுமைகளைத்
தாங்கிக் கொண்டார்
அன்னை தேசத்திற்காக!
அவர் பட்ட கஷ்டங்களை
நினைக்கும் போது
இரு விழிகளில் உருகும்
இதயம் ரணம் ஆகும்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)