மார்கழி பனித்துளி!

Su.tha Arivalagan
Dec 29, 2025,04:49 PM IST

- வே.ர. விஜயலக்ஷ்மி


காணக் காணப் பேரழகு..

தொட்டு விடத் துளிர்க்கும் பனி அழகு..

கண்ணாடி உருவாய்       

துல்லிய தூய்மையாய்...        

பச்சை பசும் புற்கள் மீது படர்கின்ற துளி அழகு... 

வண்ண வண்ண மலர்கள்  சிலிர்ப்பை  உணர்த்தும்... 

பூக்கள் மீது உறங்கும் வெண் பனித் துளி  கொள்ளை அழகு... 

இலையில் ஒட்டாமல்  உருண்டோடும்             

பனித்துளி  உலக பந்தத்தினோடு  சிக்காமல்,

ஒட்டாமல் வாழக் கற்றுக்கொடுக்கும்... 

மனிதன் வாழும் காலத் தில்


 


மார்கழி பனித்துளி போன்று வெள்ளை மனதுடன்  

மற்றவரை மகிழ்ச்செய்து ஈர மனதுடன் 

அதிகாலை எழுதல், பாவை  பள்ளி எழப் பாடுதல்...

எல்லாம் வல்ல இறையை வணங்கி 

வாசலதில்  பசுஞ்சாண மிட்டு, 

வண்ணக்கோலம் வரைந்து

ஓசோன் வாயுவினைச் சுவீகரித்து  

திருவிளக்கேற்றி, அமுது படைத்து, 

பிரபஞ்சமதில் இன்பம் காண்போம்


(V.R.VIJAYALAKSHMI,MA,B.ED,PGDSE,MPHIL, GRADUATE TEACHER,KANCHIPURAM)