வானவில்!

Su.tha Arivalagan
May 29, 2026,03:58 PM IST

- வே.ர. விஜயலட்சுமி


வானத்திலே ஒரு விந்தை

வியந்து போகுது என் சிந்தை

மழை வெயில் காணும் பூமி 

மழைக்குப்பின்னும் முன்னும் எட்டிப் பார்க்கும் ஏழு வண்ண விசிறி


இதோ வானின் வர்ண ஜாலம்..

இது மாயையில்லை,உண்மை, 

இது மாயை இல்லை உண்மை....

நிஜத்தில் வெள்ளை நிறமே

ஒளிக் கதிர்கள்  ஊடுருவியே 

வண்ண மயமாய் ஈர்க்கிறதே....

கவின் மிகு வானவில் காண்பதே அரிது....




முடிந்த மழையின் தொடர்ச்சியாய் அடிவானில் நம் கண்கள் உலவ

அதோ அழகு வானவில்..

பெரியார் சிறியோர் மட்டுமல்ல

அண்ணாந்து பார்ப் பது அனைவருமே!!!!!!!

வண்ண வண்ண நிறங்கள் வானிலே


அரை வட்டமாய் 

அசத்துகிறதே!!!!!

ஊதா என்றோர் நிறமே

காய் கறி கத்தரி நிறமே

சிவப்பு நிறத்தில் குருதியுமே

உடலினில் 

பாய்ந்தோடி உற்சாகம் தந்திடுமே...

கருநீலமான  அவுரி சாயம் பூசிடுமமே...


மஞ்சள் நிறமே மங்கலம் பொங்குமே

செழுமையை பச்சை உணர்த்திடுமே...

கடலும் வானும் நீலமதே!!!!

செம்மஞ்சள் நிறமே வளம் பெருக்குமே!!!!!!!

மறைந்து மறைந்து மிளிரும்

வான வில்லைக் கண்டு

தம்மை மறந்து  ஆர்ப்பரிப்பு செய்வர் பலருமே.....

வட்ட வட்ட வானவில்லுமே ஆரமாய்

 நீல வானிற்கு அழகுதான் சேர்த்திடுமே

அசந்து பார்க்க வைத்திடுமே!!!!!!


(வே.ர.விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியர், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், காஞ்சிபுரம்)