மனிதனை மிஞ்சுமா இயந்திரம்?

Su.tha Arivalagan
Apr 01, 2026,11:17 AM IST

- வே.ர. விஜயலட்சுமி


மிகச் சீரிய அளவில் மிஞ்சலாம் மனிதனை ...            

மனித இயந்திரங்களின் பெரு முயற்சியால் 

(மூளையை தன் பயன்பாட்டால்) இது நடந்திட 

சாத்தியக்கூறுகளுண்டு...... 

ஏற்றி விடும் ஏணியல்லவோ  மனிதனின் சிறந்த குணம்?                        

தனது செம்மையான செயற்பாட்டால் 

நுண்ணிய கருவிகளையாக்கி  

மென்பொருள் வன்பொருளென வகைப்படுத்தி

ஏற்புக்குரிய தரவுகளைத் தனித்தெடுத்துப் 

பரிசீலித்து வகைப்பிரித்து 

பாங்காய் தொகுத்தடுக்கி 




ஒரு வகைக்கு பலநூறு     

பொருத்தற் கூறுகளை  ஆய்ந்தாய்ந்து 

ஆங்காங்கே சிற்சில மாண்புகளோடு 

மனித குலத்திற்கேற்ற மைல்கல்லாய்         

படைத்தளிக்கும்  படைப்பாளியே!!!!!! 

விண்ணதிர் விஞ்ஞானியே!!!    

நீவீர் வாழ்க,வாழ்க!!! 

உமது படைப்புகள் ..

இயந்திர மனிதர்கள்...              

மனிதத் திறத்தைக் காட்டிலும் மேம்பட்டு 

மிஞ்சி செயல்படும் காலம் வெகு தூரத்தில் இல்லையே!!!!! 

காரணம் சொல்லி விடவா நண்பனே!!!! 

இதோ கேட்டுக் கொள்!!!!                  

மனிதத் தாயும் மனிதத் தந்தையும் பெற்ற குழந்தை அவன்..... 

ஆதலினால் மனிதம் மேம்பட சாதனைகள் புரிந்திடுவான்!!!!! 


(V.R. VIJAYALAKSHMI  GRADUATE TEACHER, KANCHIPURAM DISTRICT, TAMILNADU)