உலகின் நம்பிக்கை நட்சத்திரம் நீ .. மா தவம் செய்து பெண்ணாய் பிறந்த நீ!

Su.tha Arivalagan
Mar 08, 2026,03:03 PM IST
- வே.ர.விஜயலட்சுமி

பெண்ணே நீ அழகு
பெண்ணே நீ எழில்.
உலகின் நம்பிக்கை நட்சத்திரம் நீ ..
மா தவம் செய்து பெண்ணாய் பிறந்த நீ. 

பெண் சக்தி ..பெண் சக்தி  
இல்லையெனில் அனைத்துமே பட்டுப்போகும்..... 
நாளும் நன்மைகள் நடத்திட  
நடையிடும் நளின பாவை நீ ...       
மயில் மட்டுமல்ல நீ. .        .                           
கூட்டமாய் சேர்ந்துகொண்டாடி மகிழும் குயில்...
குடும்பத்தைக் கண்ணாய் காத்து
குல விளக்காய்த் திகழ்ந்து 
தாம் ஏற்ற தொழில் துறையில் சிறந்த 
சாதனைகளைப் படைத்திடும் மகளிர்க்கு எம் வாழ்த்துக்கள்.... 



குடத்தில் இட்ட  குத்துவிளக்காக  
குடும்பம் காத்து குழந்தைகளைப் பேணி வளர்த்து 
நற்சான்றோணாக்கி சமூகத்தையும் மேம்படுத்தி தரணியை ஆள்வார்...
தலை வணங்குகின்றோம்... தங்கப் பெண்களே ....

வீர மங்கையாய்த் திகழ்வது மட்டுமன்றி 
விண்ணதிர மண்ணதிர விலை நிலங்கள் தான் அதிர 
வெற்றி  மகளிராய்த்  திகழ்ந்திட 
எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....

(V.R. Vijayalakshmi ,graduate teacher for ENGLISH,CW Group, Kanchipuram)