தொடர் மழை... வைகை அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

Meenakshi
Aug 04, 2025,07:06 PM IST

தேனி: தொடர் மழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் வைகை அணை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவ மழை கேரளாவில் பெய்து வரும் காரணத்தினால் வைகையின் நீர்மட்டம் தற்போது விறுவிறு என உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தற்போது 68.50 அடியை எட்டியுள்ளது. இந்த அணை கரையோரம் உள்ள தேனி, திண்டுக்கல் , மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.




ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், ஆற்றில் இறங்கவோ. குளிக்கவோ கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்வரத்து 69 அடியை எட்டும் போது 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணையின் நீர் வரத்தை பொறுத்து, தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வைகை அணைக்கு நீர்வரத்து 1,594 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 769 கன அடியாகவும் உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக தற்போது உள்ளது. தேனி, திண்டுக்கல் , மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்காக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.