மதிமுக உட்கட்சி விவகாரம்.. மகன் துரை வைகோ எம்.பியை சமாதானம் செய்யும் வைகோ!

Meenakshi
Apr 19, 2025,04:57 PM IST

சென்னை: கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்த நிலையில் துரை வைகோவிடம் சமாதானம் பேசும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.


மதிமுக கட்சியின் முதன்மை செயலாளராக இருக்கும் வைகோவின் மகன் துரை வைகோவுக்கும், அதே கட்சியில் உள்ள மூத்த தலைவர் ஒருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இப்பதாகவும், அதனால், மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ தெரிவித்துள்ளார். அத்துடன் நீண்ட ஒரு அறிக்கையையும் துரை வைகோ வெளியிட்டுள்ளார்.




இது மதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் வைத்து துரை வைகோவை வைகோ சமாதானம் செய்து வருவதாகவும், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், பதவி விலகல் முடிவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பு கட்டளையிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.