Vaikunda Ekadashi: சொர்க்கவாசல் நாயகனே.. கோவிந்தா கோவிந்தா!

Su.tha Arivalagan
Dec 30, 2025,11:29 AM IST

- கலைவாணி ராமு


சொர்க்க வாசல்

நாயகனே

கோவிந்தா....

குறைகளை 

களைபவனே

கோவிந்தா....

மலைமீது அமர்ந்தவனே




கோவிந்தா....

மங்காத வளம் தருபவனே

கோவிந்தா.....

ஆண்டாளை

ஆண்டவனே

கோவிந்தா....

அண்டத்தையும்

ஆள்பவனே 

கோவிந்தா....

அலங்கார நாயகனே 

கோவிந்தா...

அகந்தையை

அழிப்பவனே கோவிந்தா....

தசாவதார 

தலைவனே 

கோவிந்தா...

தன்னை நாடி வருபவரை

தழைக்க வைத்தாய் கோவிந்தா...

காக்கும் தெய்வமே

கோவிந்தா...

கந்தனின்

மாமனே

கோவிந்தா....

சொக்கனுக்கு

மீனாட்சியை

தாரை வார்த்தவனே

கோவிந்தா....

அவதாரம்

பத்து எடுத்தவனே

கோவிந்தா......

அற்புதங்களை 

புரிந்தவனே 

கோவிந்தா....

கோவர்த்தன கிரியை 

குடையாக பிடித்தவனே

கோவிந்தா....

குழந்தை வடிவ

வாமனனே

கோவிந்தா....

அன்பின் 

அவதாரமே

ராமா

கோவிந்தா....

தாயின்

தலையை

கொய்தாய்

பரசுராமரே

கோவிந்தா...

அலங்கார 

பிரியனே

கோவிந்தா....

உன்னைத் தொழுதே

உன்பாதம் 

சரணடைந்தோம்

கோவிந்தா...

கோவிந்தா...

கோவிந்தா....